தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Rahul Gandhi: இனிதான் ஆட்டமே ஆரம்பம்! எதிர்க்கட்சித் தலைவர் ஆகிறாரா ராகுல் காந்தி! இன்று முக்கிய முடிவு!

Rahul Gandhi: இனிதான் ஆட்டமே ஆரம்பம்! எதிர்க்கட்சித் தலைவர் ஆகிறாரா ராகுல் காந்தி! இன்று முக்கிய முடிவு!

Kathiravan V HT Tamil
Jun 08, 2024 11:22 AM IST

சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 99 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், இந்த வெற்றிக்கு ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடா யாத்திரை மற்றும் பாரத் நியாய் யாத்திரையே காரணம் என்று காங்கிரஸ் கட்சியினர் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

Rahul Gandhi: இனிதான் ஆட்மே ஆரம்பம்! எதிர்க்கட்சித் தலைவர் ஆகிறாரா ராகுல் காந்தி! இன்று முக்கிய முடிவு!
Rahul Gandhi: இனிதான் ஆட்மே ஆரம்பம்! எதிர்க்கட்சித் தலைவர் ஆகிறாரா ராகுல் காந்தி! இன்று முக்கிய முடிவு! (ANI)

ட்ரெண்டிங் செய்திகள்

காங்கிரஸ் நடாளுமன்றக் குழு கூட்டம் 

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என்ற சலசலப்புக்கு மத்தியில், நாடாளுமன்றத்தில் அக்கட்சியின் எம்.பி.க்களை யார் வழிநடத்துவது என்பது குறித்து முடிவு செய்ய இன்று முக்கிய ஆலோசனை கூட்டத்தை அக்கட்சி நடத்துகிறது. 

சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 99 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், இந்த வெற்றிக்கு ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடா யாத்திரை மற்றும் பாரத் நியாய் யாத்திரையே காரணம் என்று காங்கிரஸ் கட்சியினர் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

52 முதல் 99 வரை 

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறுகையில், "காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், 2024 தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்ய உள்ளோம். மாலை 5:30 மணிக்கு நடைபெறும் காங்கிரஸ் பாராளுமன்றக் குழு கூட்டத்தில், நாடாளுமன்றக் குழுத் தலைவரை தேர்ந்து எடுப்போம். லோக்சபாவில், ராகுல் காந்திக்கு பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் அனைவரும் நினைக்கிறோம். அவர் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டால், அவர் 234 எதிர்க்கட்சி எம்.பிக்களை வழிநடத்துவார். சென்ற நாடாளுமன்ற மக்களவையில், தனிப்பெரும் கட்சியாக இருந்த பாஜக தற்போது பெரும்பான்மையை இழந்து உள்ளது. சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமாரை நம்பி ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்திய கூட்டணி தலைவர்கள் பொறுத்திருந்து பார்க்க முடிவு செய்துள்ளனர், சரியான நேரத்தில் முடிவெடுப்போம் என கூறினார். 

மீண்டும் சோனியா காந்தி தலைவர் ஆவாரா?

ஏஎன்ஐ நிறுவனத்தின்  செய்தியின்படி, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது.

லோக்சபா தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற ராகுல் காந்தி, அப்பதவியை ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. 

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கட்சியின் தலைவர்களின் பெயரைக் குறிப்பிடுவதற்கு நாடாளுமன்றக் கட்சியின் தலைவருக்கு அதிகாரம் உள்ளது.

முன்னதாக, மக்களவையில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருந்தார். இந்த நிலையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் யூசுப் பதானிடம் அவர் தோல்வியை தழுவினார். நாடாளுமன்ற மேலவையின் எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளார்.

இந்த நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி வர வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி குரியகோசும் கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக பேசிய அவர், "காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் இன்று தேர்வு செய்யப்பட உள்ளார். அப்பதவிக்கு ராகுல் காந்தி வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது எங்களிடம் நல்ல எண்ணிக்கையில் எம்பிக்கள் உள்ளனர். நல்ல எதிர்க்கட்சியை உருவாக்குவோம். பாஜகவுக்கு எதிராகப் போராடுவோம் என கூறி உள்ளார். 

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியா கூட்டணி 234 இடங்களில் வென்று உள்ளது. பாஜக மட்டும் 240 இடங்களில் வென்று உள்ளது உள்ளது. இதனால் நிதீஷ் குமார் மற்றும் என் சந்திரபாபு நாயுடுவின் ஆதரவைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை அக்கட்சிக்கு ஏற்பட்டு உள்ளது.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்