தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  தேர்தல் ஆணையம் சர்ப்ரைஸ் – என்ன கொடுத்தது வாக்காளர்களுக்கு

தேர்தல் ஆணையம் சர்ப்ரைஸ் – என்ன கொடுத்தது வாக்காளர்களுக்கு

Priyadarshini R HT Tamil
Feb 27, 2023 12:06 PM IST

Assembly Elections: மேகாலயாவில் முதலில் வந்து வாக்களித்ததற்காக வாக்காளர்களை பாராட்டி பிரிசு வழங்கப்பட்டது. தொடங்கியவுடன் வாக்களிக்க வேண்டும் என்பதை ஊக்குவிப்பதற்காக இந்த பரிசுகள் வழங்கப்பட்டது.

மேகாலயாவில் முதலில் வந்து வாக்களித்த வாக்காளர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
மேகாலயாவில் முதலில் வந்து வாக்களித்த வாக்காளர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

ட்ரெண்டிங் செய்திகள்

அங்கு இன்று காலை வாக்குப்பதிவு துவங்கியவுடன் முதலில் வந்த 5 பேரை தொடங்கியவுடன் வாக்களிக்க வந்ததற்காக பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. இதனால் வாக்காளர்கள் உற்சாகமடைந்தனர். மக்கள் தொடங்கியவுடேனே வாக்களிக்க வேண்டும் என்பதை ஊக்குவிப்பதற்காக இதுபோன்ற பரிசுகள் வழங்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேகாலயாவில், 2018ல் காங்கிரஸ் 21 இடங்களைப்பெற்று ஒற்றை பெரிய கட்சியாக இருந்தது. இங்கும் 60 தொகுதிகள் உள்ளன. ஆனால், பாஜக மற்றும் மற்ற சிறிய மாநில கட்சிகளின் ஆதரவுடன் 19 இடங்களில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் கட்சி ஆட்சியிமைத்தது. 

இந்த தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு பெரு தேசிய கட்சிகளும் 60 இடங்களிலும் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. தேசிய மக்கள் கட்சி 57 இடங்களிலும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 56 இடங்களிலும் போட்டியிடுகிறது. 2021ல் ஒரு இடத்தில் கூட டிஎம்சி வெற்றிபெறவில்லையென்றாலும், 5 ஆண்டுகளுக்கு முன்னர், முன்னாள் முதல்வர் முகுல் சங்மா உள்பட 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அணி மாறியதையடுத்து பெரிய எதிர் கட்சியாக இருந்தது. 

தற்போது 375 வேட்பாளர்கள் களத்தில் உள்ளார்கள். மற்ற கட்சிகளான ஒருங்கிணைந்த ஜனநாயக கட்சி (46), மலை மாநில மக்கள் ஜனநாயக கட்சி (11), மக்கள் ஜனநாயக முன்னணி (9), கேரோ தேசிய கவுன்சில் (2) மற்றும் கன சுரக்ஷா கட்சி (1), இரண்டு புதிய கட்சிகள் வாய்ஸ் ஆப் பீப்புள் கட்சி (18) மற்றும் காம் மேகாலயா (3) ஆகியோர் இந்த முறை களத்தில் உள்ளார்கள்.  

‘ஆட்சியில் உள்ள தேசிய மக்கள் கட்சி அவர்கள் ஆட்சிக்காலத்தில் நிறைய சாதனைகள் செய்ததாக பிரச்சாரம் செய்தார்கள். பாஜக பிரச்சாரம் இறுதியில் சூடுபிடித்தது‘ என்று வடகிழக்கு மலை பல்கலைக்கழக அரசியல் அறிவியல் பேராசிரியர் ஸ்ரீகாந்த் கூறினார். “பாடல்களும், ஆடல்களும்தான் அதிகம் இருந்ததேயொழிய முக்கிய பிரச்னைகளில் பெரும்பாலான கட்சிகள் கவனம் செலுத்தவில்லை. முக்கிய பிரச்னைகளான சட்டத்திற்கு புறம்பான நிலக்கரி சுரங்க பிரச்னைகள் மற்றும் உள்கோட்டு அங்கீகாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. 

இங்கு காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இங்கு தேர்தல் நடப்பதையொட்டி, மேகாலயாவின் பங்களாதேசுடனான சர்வதேச எல்லை மூடப்பட்டது. அது வாக்கு எண்ணிக்கை நடக்கும் மார்ச் 2ம் தேதி வரை பூட்டி வைக்கப்பட்டிருக்கும். மேகாலயா, பங்களாதேசுடன் 443 கிமீ, அசாமுடன் 885 கிமீ தூராம் எல்லையை பகிர்ந்துகொள்கிறது. 

எல்லையில் 144 தடை எதற்காக? 

மேலும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதற்காக பங்களாதேஷ் எல்லை மூடப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையர் கார்கொங்கார் தெரிவித்தார். முன்னெச்சரிக்கையாக அப்பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார். 

இந்திய – பங்களாதேச எல்லையைச்சுற்றி ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் யாரும் நடமாட, கிழக்கு காஷி மலை மாவட்ட நீதிபதி தடை உத்தரவை பிறப்பித்தார். அம்மாவட்ட நிர்வாகமும் எல்லை பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்தது. 

தேர்தல் அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம், தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளை கடந்த வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் இன்று இரவு 7 மணி வரை வெளியிட தடை விதித்துள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்