தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Viral : இது கொஞ்சம் ஓவர் தான்.. குளித்து கொண்டே ஸ்கூட்டரில் சென்ற இளம் ஜோடி.. வீடியோ வைரலான நிலையில் போலீசார் நடவடிக்கை!

Viral : இது கொஞ்சம் ஓவர் தான்.. குளித்து கொண்டே ஸ்கூட்டரில் சென்ற இளம் ஜோடி.. வீடியோ வைரலான நிலையில் போலீசார் நடவடிக்கை!

Divya Sekar HT Tamil
May 19, 2023 11:07 AM IST

உல்ஹாஸ்நகரில் காதல் ஜோடி ஸ்கூட்டரில் செல்லும் போது குளித்து கொண்டே சென்ற வீடியோ வைரலான நிலையில் அவர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

குளித்து கொண்டே ஸ்கூட்டரில் சென்ற இளம் ஜோடி
குளித்து கொண்டே ஸ்கூட்டரில் சென்ற இளம் ஜோடி

ட்ரெண்டிங் செய்திகள்

ஸ்கூட்டரில் பக்கெட் ஒன்றில் தண்ணீர் நிரப்பி ஸ்கூட்டரில் செல்ல செல்ல குளித்துக்கொண்டே செல்கின்றனர். பின்னால் அமர்ந்திருக்கும் அப்பெண் பக்கெட்டில் உள்ள தண்ணீரை ஆண் நண்பர் மீதும் அவர் மீதும் ஊற்றிக்கொண்டே செல்கின்றனர். இச்சம்பவம் மே 17 அன்று நடந்ததாக தெரிகிறது.

அதுவும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில், சிக்னலில் என தண்ணீர் ஊற்றி கொண்டே சென்றுள்ளனர்.இதுதொடர்பான வீடியோ தான் தற்போது வைராகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இது முட்டாள்தனமான செயல் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்த வீடியோ பகிர்ந்து வழக்கு பதிவு செய்ய கோரி உயர் போலீஸ் அதிகாரிகளை டேக் செய்ய பலர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த வீடியோ குறித்து ஆம் ஆத்மி ட்விட்டரில் புகார் அளித்தது. அதில், இது உல்ஹாஸ்நகர், பொழுதுபோக்கின் பெயரில் இதுபோன்ற முட்டாள்தனமாக செயல்கள் அனுமதிக்கப்படுமா? இது பரபரப்பான உல்ஹாஸ்நகர் செக்-17 முக்கிய சிக்னலில் நடந்ததுள்ளது.

பொதுமக்கள் முன்னிலையில் இதுபோன்ற முட்டாள்தனமான செயல்களைச் செய்வதை கண்டிக்கும் வகையில் அவர்களில் சமூக வலைதள பக்கத்தை நீக்குவது உட்பட கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்”என கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து தானே போலீசார் கூறுகையில், உள்ளூர் போக்குவரத்து போலீசாருக்கு இந்த விஷயத்தை அனுப்பியுள்ளோம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வீடியோவில் இடம்பெற்ற ஆண் மற்றும் பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உல்ஹாஸ்நகர் மற்றும் தானே மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு அருகில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்