தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Uttar Pradesh: திரைப்பட பாணியில் ஒரு பெண்ணுக்கு உரிமை கோரிய இரண்டு நபர்கள்!

Uttar Pradesh: திரைப்பட பாணியில் ஒரு பெண்ணுக்கு உரிமை கோரிய இரண்டு நபர்கள்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 19, 2023 12:40 PM IST

பிங்கி தன்னை முதல் கணவர் தினமும் அடித்து உதைத்ததாக குற்றம் சாட்டிய நிலையில் அது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

கோப்புபடம்
கோப்புபடம்

ட்ரெண்டிங் செய்திகள்

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி நகரில் வசிப்பவர் பிங்கி என்ற பெண். இந்நிலையில் ஜான்சி நகரின் அருகில் உள்ள ஜலுன் என்ற கிராமத்தை சேர்ந்த சுக்ராம் என்பவர் காவல் நிலையத்திற்கு வந்தார். அப்போது பிங்கியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று காவலர்களிடம் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து காவல்துறையினர் பிங்கியை காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர்.

பிங்கியும் காவல் நிலையத்திற்கு வந்தார். அப்போது பிங்கி வேறு ஒரு நபரை அழைத்து வந்தார்.

இதில் இரண்டாவதாக வந்த வாலிபர் பிங்கியை தன்னுடன் அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் தான் பிங்கியை நீதிமன்றம் மூலம் திருமணம் செய்து கொண்டதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

அப்போது முதலில் வந்த நபர் இல்லை இல்லை என்னுடன் தான் பிங்கியை அனுப்ப வேண்டும். ஏனென்றால் அரசு சார்பாக ஒரே இடத்தில் மொத்தமாக நடத்தி வைக்கப்பட்டதில் தான் பிங்கியை திருமணம் செய்து கொண்டதாக சுக்ராம் தெரிவித்தார்.

இதையடுத்து செய்வதறியாது தவித்த காவல்துறையினர் இரண்டு கணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அந்த பேச்சு வார்த்தை சுமார் 6 மணி நேரம் தொடர்ந்தது. ஆனால் இருவம் பிங்கியை தன்னுடன் தான் அனுப்ப வேண்டும் என்று அடம் பிடித்ததால் காவல்துறையினர் ஒரு கட்டத்தில் திணறத்தொடங்கினர்.

இதையடுத்து போலீசார் பிங்கியிடம் பேசினர். அப்போது பிங்கி தன் முதல் கணவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து அடித்து உதைப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார் என்று குற்றம் சாட்டினார். மேலும் ஓராண்டாக இப்படியாக சித்தரவதையை தாங்கி கொண்டதாக தெரிவித்தார். பின் வேறு விழியின்றி அவரை பிரிந்து சென்று விட்டதாக தெரிவித்தார்.

அன் பிறகுதான் ரானிப்பூர் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் அவரையே நீதிமன்றம் மூலம் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.  இதனால் தான் இரண்டாவது கணவருடன்தான் வாழப்போவதாகவும் உறுதியாக தெரிவித்தார்.

இதையடுதது காவல்துறையினர் பிங்கியின் விருப்பப்படி அவரது இரண்டாவது கணவருடன் அனுப்பி வைத்தனர்.

அதுமட்டும் இல்லாமல் பிங்கி தன்னை முதல் கணவர் தினமும் அடித்து உதைத்ததாக குற்றம் சாட்டிய நிலையில் அது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். இவ்வாறாக திரைப்பட பாணியில் 6 மணி நேரமாக நடந்த விசாரணை முடிவுக்கு வந்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்

IPL_Entry_Point

டாபிக்ஸ்