தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Crime: சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை - கோடிக்கணக்கில் மோசடி செய்த காவலர்!

Crime: சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை - கோடிக்கணக்கில் மோசடி செய்த காவலர்!

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 09, 2023 12:06 PM IST

சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி போக்குவரத்து காவலர் ஒருவர் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளார்.

மோசடி
மோசடி

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து பல்வேறு சாப்ட்வேர் நிறுவனங்களின் பெயரில் போலியான ஈமெயில் ஐடி, வேலைவாய்ப்பு கடிதங்கள் உள்ளிட்டவற்றைத் தயாரித்து பணம் நபர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் பணம் கொடுத்தவர்கள் சிவைய்யா கொடுத்த முகவரிக்குச் சென்று பார்த்தபோது அங்கு எந்த ஒரு சாப்ட்வேர் நிறுவனமும் இல்லை. இதனைக் கண்டவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பணம் கொடுத்து ஏமாந்து விட்டதாகக் கூறி சிவைய்யாவிடம் திருப்பி பணத்தைக் கேட்டுள்ளனர்.

பணம் கொடுத்தவர்களுக்குச் சரியான பதில் சொல்லாத காரணத்தினால் அவர் வேலை செய்யும் காவல் நிலையம் முன்பாக பணம் கொடுத்தவர்கள் குவிந்துள்ளனர்.

இதுகுறித்து உயர் அலுவலர்களிடம் தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் சிவைய்யாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.

விசாரணையில், சாப்ட்வேர் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியது மட்டுமல்லாமல், காவல்துறையிலும் வேலை வாங்கித் தருவதாகப் பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.

தற்போது ஏமாற்று வேலையில் ஈடுபட்ட சிவைய்யாவிடம் எத்தனை பேர் எவ்வளவு பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்துள்ளார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்