தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  உலகின் அதிவேக பெண், தடை பல கடந்தவர், இன்றைய கூகுள் டூடுல் பிரபலம் யார்?

உலகின் அதிவேக பெண், தடை பல கடந்தவர், இன்றைய கூகுள் டூடுல் பிரபலம் யார்?

Priyadarshini R HT Tamil
Mar 24, 2023 10:01 AM IST

Google Doodle Women's day 2023 : இந்த மகளிர் மாதத்தில் நாம் சாதனை படைத்த மற்றும் சாதித்து வரும் பெண்கள் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய கூகுள் டூடுல் பிரபலமும் ஒரு சாதனை பெண்மணிதான். கிட்டி லின்ஓநெயில் குறித்து இங்கு பார்க்கலாம்.

இன்றைய கூகுள் டூடுல் பிரபலம் கிட்டி ஓநெயில்
இன்றைய கூகுள் டூடுல் பிரபலம் கிட்டி ஓநெயில்

ட்ரெண்டிங் செய்திகள்

நான் காதுகேளாத மாற்றுத்திறனாளியாக இருந்ததாலும், எனக்கு நேர்மறை எண்ணங்களே இருந்தது. உங்களாலும் எல்லாம் செய்யு முடியும் என்று நீங்கள் மக்களுக்கு காட்டவேண்டும்“ என்று அவர் 1977ம் ஆண்டு பீப்பிள் மேகசீனுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். ராணுவத்தில பணபுரிந்த அவரது தந்தை விமான விபத்தில், நெயில் குழந்தையாக இருந்தபோதே இறந்துவிட்டார். அவரது தாய்தான் அவரை வளர்த்தார்.

தனது பதின் பருவத்தில் 10 மீட்டர் மற்றும் 3 மீட்டர் ப்ளாட்பார்ம் டைவராக இருந்தார். அமெச்சூர் அத்தலெட்டிக் சங்க டைவிங் சாம்பியனானார். 1964 ஒலிம்பிக் போட்டிகளுக்காக தன்னை தயார்படுத்திக்கொண்டிருந்தபோது அவர் தனது மணிக்கட்டை உடைத்துக்கொண்டார். முதுகுத்தண்டில் ஏற்பட்ட பிரச்னையால் அவர் நடப்பதில் சிரமம் ஏற்படுத்தியது. அதனால் அவரால் ஒலிம்பிக் செல்ல முடியவில்லை. கோடை கால டெபிலிம்பிக்சில் நீச்சலில் வெற்றி பெற்றார். ஒரு கட்டத்தில் அவர் டைவிங்கை கைவிட்டார். பின்னர் தண்ணீர் ஸ்கீயிங், ஸ்கூபா டைவிங், ஸ்கை டைவிங் மற்றும் ஹாங் கிளைடிங் ஆகியவற்றில் ஈடுபட்டார். டைவிங் என்னை அவ்வளவு பயமுறுத்துவதாக இல்லை என்று கூறினார் நெயில். தனது 20 வயதுகளின் இறுதியில், அவர் புற்றுநோய்காக இரண்டு சிகிச்சைகளைப்பெற்றார்.

goodle doodle படம்
goodle doodle படம்

பின்னர் அவர் தண்ணீர் மற்றும் நிலம் இரண்டிலும் ரேசிங் செய்வதில் ஈடுபட்டார். அவர் ஸ்டன்ட் செய்யும் ஹால் நீதம் மற்றும் ரான் ஹாம்பிளீடன் ஆகியோரை சந்தித்தார். ஹாம்பிளீடனும் சேர்ந்து வாழ்ந்தார். அப்போது அவர் ரேசிங்கிற்கு சிறிய இடைவேளை விட்டிருந்தார். பின்னர் அவர் ஸ்டன்ட் பயிற்சியில் ஈடுபட்டார். பின்னர் ஸ்டன்ட் செய்யும் முதல் பெண்மணி ஆனார். அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், படங்களிலும் ஸ்டன்ட் செய்யும் பெண்மணியாக தோன்றினார். அவரது ஸ்ட்ன்களால் அவர் ஆக்ஷன் பெண்மனியாகவும் அறியப்பட்டார். தான் தேர்ந்தெடுத்த ஒவ்வொரு துறையிலும் சாதனை படைத்த அவர் 2018ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி இறந்தார். அவருக்கு ஆஸ்கர் விருதும் கிடைத்துள்ளது. அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் கூகுள் டூடிலில் இன்று அவரது பிம்பம் வைக்கப்பட்டுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்