தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Taliban: பெண்கள் அழகு நிலையங்களுக்குத் தடை - தலிபான் அரசு உத்தரவு

Taliban: பெண்கள் அழகு நிலையங்களுக்குத் தடை - தலிபான் அரசு உத்தரவு

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 04, 2023 08:44 AM IST

ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களுக்குத் தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.

அழகு நிலையங்களுக்குத் தடை
அழகு நிலையங்களுக்குத் தடை

ட்ரெண்டிங் செய்திகள்

பின்னர் பூங்கா, திரையரங்குகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களுக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. தற்போது இதனைத் தொடர்ந்து காபூல் மற்றும் நாட்டில் உள்ள மற்ற மாகாணங்களில் பெண்கள் அழகு நிலையங்களுக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பியூட்டி பார்லர் யாரும் செல்லக்கூடாது எனக் கடுமையாக தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து நல்லொழுக்க அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், தலிபான் அரசின் புதிய உத்தரவை நடைமுறைப்படுத்தி பெண்கள் பியூட்டி பார்லரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து மேக்கப் கலைஞர் ஒருவர், இந்த உத்தரவின் மூலம் பெண்கள் வேலைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பெண்கள் உரிமை பறிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இதுவும் அதோடு சேர்ந்து விட்டது. இங்கு இருக்கும் ஆண்களுக்கே சரியான வேலை வாய்ப்பு இல்லை.

ஆண்கள் வீட்டில் சுமையை முழுமையாக ஏற்க முடியாத நிலையில், பெண்கள் இது போன்ற அழகு நிலையங்கள் மற்றும் சில வேலைகளுக்குச் செய்து தங்களைக் காப்பாற்றிக் கொள்கின்றனர். தற்போது அழகு நிலையத்திற்குத் தடை விதித்தால் நாம் என்ன செய்ய முடியும். இங்கு இருக்கும் ஆண்களுக்குச் சரியான வேலையும், சம்பளமும் இருந்தால் நாங்கள் வீட்டை விட்டு வெளியே வர மாட்டோம்.

இப்படித் தொடர்ந்து உத்தரவுகளைப் பிறப்பித்து வந்தால் நாங்கள் பட்டினி கிடந்து உயிர் இழக்க வேண்டியது தான். நாங்கள் சாக வேண்டும் என்று விரும்புகிறீர்களா? எனத் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள சிறுமிகள் மற்றும் பெண்கள் மீது தலிபான்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகளும் புதிய உத்தரவுகளும், சர்வதேச அளவில் எதிர்வினைகளைத் தூண்டி உள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Google News: https://bit.ly/3onGqm9

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்