தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  N .Korea Vs S. Korea: தென்கொரியா மீது தாக்குதல் நடத்திய வடகொரியா - நடந்தது என்ன?

N .Korea Vs S. Korea: தென்கொரியா மீது தாக்குதல் நடத்திய வடகொரியா - நடந்தது என்ன?

Marimuthu M HT Tamil
Jan 05, 2024 01:11 PM IST

தென் கொரிய இராணுவத்தின் வேண்டுகோளுக்குப் பிறகு வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக யோன்பியோங் கிராம அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

தென்கொரியாவில் பதற்றம்
தென்கொரியாவில் பதற்றம்

ட்ரெண்டிங் செய்திகள்

வடகொரியா இன்று(ஜனவரி 5) தென் கொரியாவுடனான கடல் எல்லைக்கு அருகே கடலில் 200-க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகளை ஏவியது.

இந்த அசாதாரணமான சூழல் காரணமாக, இரண்டு எல்லைத் தீவுப்பகுதியில் வசிப்பவர்களை தென்கொரியா வெளியேற உத்தரவிட்டுள்ளது. 

வடகொரியாவின் பீரங்கித் தாக்குதலால் இந்த வெளியேற்ற உத்தரவுபிறப்பிக்கப்பட்டதா அல்லது தென்கொரிய பயிற்சிகளுக்காக மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனரா என்பதை தென்கொரியப் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தவில்லை.

இருப்பினும், தென்கொரிய மக்களுக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியில், இன்று(ஜனவரி 5) பிற்பகல் 3 மணிக்கு தென் கொரிய துருப்புக்களால் “கடற்படை துப்பாக்கிச் சூடு” நடத்தப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்கொரியாவின் (என்.எல்.எல்) தெற்கே உள்ள யோன் பியோங் தீவில், தென் கொரிய ராணுவத்தின் வேண்டுகோளின்பேரில் இந்த வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

வட கொரியாவின் பீரங்கித் தாக்குதலால் தெற்கில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று தென் கொரியாவின் ராணுவ அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், யோன் பியோங் தீவைத் தவிர, மேற்கு மற்றும் கடல் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள பெய்ங்யாங் தீவின் குடியிருப்பாளர்களும் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர் என்று உள்ளூர் கிராம அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

2018-ம் ஆண்டு ராணுவ ஒப்பந்தத்தை மீறி, சர்ச்சைக்குரிய மேற்கு கடல் எல்லைக்கு அருகே கடல் பகுதியில் வடகொரியா 200 ரவுண்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தென்கொரியாவின் கூட்டுத்தளபதிகள் ஏபி செய்தி முகமையிடம் தெரிவித்தனர். வட கொரியாவின் இந்தப் பயிற்சியை ஆத்திரமூட்டல் என்று கூறியுள்ளது.

ஏ.எஃப்.பி செய்தி முகமையின்படி, தென்கொரிய அரசு வட கொரியாவின் ஷெல் தாக்குதல்களுக்கு "பொருத்தமான" நடவடிக்கைகளுடன் பதிலளிக்கப்படும் என்று எச்சரித்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews  

Google News: https://bit.ly/3onGqm9   

IPL_Entry_Point

டாபிக்ஸ்