தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Obc Reservation For Muslims: இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு ரத்துக்கு எதிரான வழக்கு - பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம்

OBC Reservation For Muslims: இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு ரத்துக்கு எதிரான வழக்கு - பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 25, 2023 02:22 PM IST

கர்நாடக மாநிலத்தில் இசுலாமியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் அதுவரை இடஒதுக்கீடு ரத்து முடிவை அமல்படுத்தகூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீதம் இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு
இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீதம் இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

ட்ரெண்டிங் செய்திகள்

கர்நாடக அமைச்சரவையின் இந்த முடிவுக்கு மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அத்துடன் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் கர்நாடக அரசின் இந்த முடிவு இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகவும், இந்துக்களின் வாக்குகளை கவரும் வண்ணம் எடுக்கப்பட்டதாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. இதையடுத்து அரசின் இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், இந்த விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என கர்நாடக அரசு சார்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் வழக்கின் விசாரணையை மே 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து செய்த உத்தரவை அமல்படுத்தகூடாது எனவும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை சமரசப்படுத்தும் முயற்சியாக கடந்த மார்ச் 24ஆம் தேதி, 2B பிரிவின் கீழ் இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்பட்ட 4 சதவீத இடதுஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாகவும், அதை ஒக்கலிகாஸ லிங்காயத் சமூதாய மக்களுக்கு சமமாக பிரித்து கொடுப்பதாகவும் முடிவு செய்து அரசு உத்தரவிட்டது.

இதற்கு எதிர்கட்சிகள் கடுமையான இஸ்லாமியர்களின் உரிமை பறிக்கப்படுவதாக விமர்சனங்களை முன் வைத்தன. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநில செய்தி தொடர்பாளர், நடிகை மாளவிகா அவினாஷ், இடஒதுக்கீடு சாதி அடிப்படையில்தான் வழங்கு முடியும். மத அடிப்படையில் தர முடியாது. எனவே காங்கிரஸ் ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு 2B என்ற தனி உள் இடஒதுக்கீடு பிரிவு உருவாக்கப்பட்டது. இது அரசியலமைப்பு எதிரானது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு, பிறபடுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில்தான் இந்த ரத்து முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவத்தார்.

இந்த சூழ்நிலையில் இடஒதுக்கீடு ரத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யவும், அதுவரை இந்த ரத்து உத்தரவை அமல்படுத்தகூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக அரசு சார்பில் இதற்கு உத்தரவாதமும் அளிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

IPL_Entry_Point

டாபிக்ஸ்