தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ramzan Celebration 2023:ரம்ஜான் கொண்டாட்டத்தை துறந்த சாங்கியோட் கிராமம்-நெகிழ வைக்கும் பின்னணி!

Ramzan Celebration 2023:ரம்ஜான் கொண்டாட்டத்தை துறந்த சாங்கியோட் கிராமம்-நெகிழ வைக்கும் பின்னணி!

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 22, 2023 12:06 PM IST

Ramzan 2023:சாங்கியோட் என்ற அந்த குக்கிராம மக்கள் ரம்ஜானை துறந்துள்ளதற்கான காரணம் தான் இங்கு மிகவும் நெகிழ வைக்கும் வகையில் உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த 5 ராணுவ வீரர்களின் உடல்களுக்கு அருகே பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்தனர். (PTI)
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த 5 ராணுவ வீரர்களின் உடல்களுக்கு அருகே பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்தனர். (PTI) (HT_PRINT)

ட்ரெண்டிங் செய்திகள்

உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் இன்று ரம்ஜான் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்தியாவை பொறுத்தமட்டில் நாடு முழுவதும் உள்ள இஸ்லமிய மக்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் திளைத்து இருக்கும் நிலையில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சாங்கியோட் என்ற குக்கிராம மக்கள் மட்டும் இன்று ரமலான் சிறப்பு தொழுகையோடு முடித்துக்கொண்டு மற்ற கொண்டாடங்களை தவிர்த்து உள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராம மக்கள் தான் இந்த ரம்ஜான் பண்டிகையை துறந்துள்ளனர். சாங்கியோட் என்ற அந்த குக்கிராம மக்கள் ரம்ஜானை துறந்துள்ளதற்கான காரணம் தான் இங்கு மிகவும் நெகிழ வைக்கும் வகையில் உள்ளது.

அண்மையில் பூஞ்சில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்ததே இதற்கு காரணம் என்று அக்கிராம மக்கள் கூறி உள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான ராணுவ வாகனம் பாலாகோட்டில் உள்ள பசூனி ராணுவ தலைமையகத்தில் இருந்து பழங்கள் உள்ளிட்ட பொருட்களுடன் சாங்கியோட்டில் நடைபெறவிருந்த இஃப்தார் விருந்துக்காக புறப்பட்டது. அந்த வாகனம் வரும் வழியில் பிம்பர் காலி பகுதியில் இஃப்தார் விருந்துக்காக இன்னும் சில பொருட்களை ஏற்றும்போதே இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதனால்தான் சாங்கியோட் கிராம மக்கள் கொண்டாட்டங்களைப் புறக்கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவத்தினர் சென்ற வாகனத்தில் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாடா துரியன் என்ற பகுதிக்கு அருகே உள்ள நெடுஞ்சாலையில் அடர்ந்த காட்டுப்பகுதியில் வைத்து இந்த தாக்குதலானது நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலை அடுத்து ராணுவம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பலரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கண் இமைக்கும் நேரத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்த நிலையில், 7 பேர் சேர்ந்த தீவிரவாத கும்பல் இதில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. தற்போது தீவிரவாதிகளை தேடும் பணியில் ராணுவத்தினரும், போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

IPL_Entry_Point

டாபிக்ஸ்