தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Sachin At 50: டீ டைம் - 50 நாட் அவுட் - பிறந்தநாளை தேநீரில் தொடங்கிய சச்சின்..!

Sachin at 50: டீ டைம் - 50 நாட் அவுட் - பிறந்தநாளை தேநீரில் தொடங்கிய சச்சின்..!

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 24, 2023 01:30 PM IST

சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் 50 நாட் அவுட் என்ற பதிவைப் போட்டுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்

ட்ரெண்டிங் செய்திகள்

சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் இவர் செய்யாத சாதனைகளே கிடையாது. தற்போதும் கிரிக்கெட் அணியின் பிதாமகன் ஆக சச்சின் டெண்டுல்கர் திகழ்ந்து வருகிறார்.

இளம் வயதிலேயே சுட்டித்தனமாக இருந்த சச்சின் டெண்டுல்கருக்கு கிரிக்கெட் தான் உலகம். இவரது திறமையைக் கண்ட சகோதரர் மும்பையில் புகழ்பெற்ற பயிற்சியாளரான அச்ரேக்கரிடம் சேர்த்துள்ளார்.

14 வயதில் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடத் தொடங்கியவர். 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி வரை நிற்காமல் ஓடினார். அந்த ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்று அந்த கோப்பை சச்சினுக்கு காணிக்கையாக்கப்பட்டது.

எனக்கு கிடைக்கின்ற மிகப்பெரிய வெகுமதி என்னவென்றால் சச்சின் சச்சின் என்று மைதானத்தில் ரசிகர்கள் என் பெயரைச் சொல்வது தான் என ஒரு பேட்டியில் சச்சின் கூறி இருக்கிறார்.

ஒரு நாள் மட்டும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் உட்படச் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதம் அடித்து சாதனை புரிந்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம், உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பல சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார்.

மும்பையில் 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி அன்று பிறந்தார் சச்சின் டெண்டுல்கர். இன்று தனது 50 வது பிறந்த நாளை சச்சின் டெண்டுல்கர் கொண்டாடி வருகிறார். உலகம் முழுவதும் உள்ள இவரது ரசிகர்கள் வெகு விமர்சையாக இவரது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.

உலகம் முழுவதிலிருந்தும் ஏராளமான பிரபலங்கள் சச்சின் டெண்டுல்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் சச்சின் டெண்டுல்கர் மிகவும் எளிமையாக ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.

அந்த பதிவில், தேநீர் நேரம், 50 நாட் அவுட் என பதிவிட்டுள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

WhatsApp channel

டாபிக்ஸ்