Rahul Gandhi slams BJP: காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கம் - பாஜக ஒரு அசுரசக்தி என விமர்சித்த ராகுல் காந்தி!
Lok Sabha Election 2024: தேர்தல் பிரசாரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் காங்கிரஸ் வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ள பாஜக தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் 2024: இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே (நடுவில்), கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி (இடது) மற்றும் ராகுல் காந்தி (வலது) ஆகியோருடன் இன்று புது தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றினார்.(Photo by Arun SANKAR / AFP) (AFP)
Lok Sabha Election 2024: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார். இது தேர்தல் பிரசாரப் பணிகள் மற்றும் வேட்பாளர்களின் பணிக்கு இடையூறாக உள்ளது என்று கூறினார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், "வெறுப்பு நிறைந்த 'அசுர சக்தி' இந்திய ஜனநாயகத்தை படுகொலை செய்ய நமது வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
அமித் ஷா செய்த கிரிமினல் நடவடிக்கை:
முன்னதாக, டெல்லியில் செய்தியாளர் சந்திப்பின்போது, ராகுல் காந்தி, "காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் என்பது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் செய்த கிரிமினல் நடவடிக்கை" என்று கூறினார்.