Rahul and Sharad Pawar Shares Stage: ஒரே மேடையில் தோன்றிய ராகுல் காந்தியும் சரத் பவாரும் - பின்னணி என்ன?
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Rahul And Sharad Pawar Shares Stage: ஒரே மேடையில் தோன்றிய ராகுல் காந்தியும் சரத் பவாரும் - பின்னணி என்ன?

Rahul and Sharad Pawar Shares Stage: ஒரே மேடையில் தோன்றிய ராகுல் காந்தியும் சரத் பவாரும் - பின்னணி என்ன?

Marimuthu M HT Tamil
Mar 14, 2024 01:03 PM IST

Rahul and Sharad Pawar Shares Stage: பாரத் ஜோடோ நியாய் யாத்திரையின் ஒரு பகுதியாக ராகுல் காந்தி விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது சரத் பவாரும் ராகுல் காந்தியும் ஒரே மேடையில் தோன்றினர்.

பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் ஒரு பகுதியாக மகாராஷ்டிராவின் நாசிக்கில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் என்சிபியின் சரத் பவார் மற்றும் சிவசேனா (யுபிடி) சஞ்சய் ராவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் ஒரு பகுதியாக மகாராஷ்டிராவின் நாசிக்கில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் என்சிபியின் சரத் பவார் மற்றும் சிவசேனா (யுபிடி) சஞ்சய் ராவத் ஆகியோர் கலந்து கொண்டனர். (X/INC)

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் நகரில் உள்ள க்ருஷி உத்பன்னா பஜார் சமிதியில் வியாழக்கிழமையான இன்று விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் தேசிய காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவார் மற்றும் சிவசேனா (யுபிடி) தலைவர் சஞ்சய் ராவத் உள்ளிட்ட பிற மகா விகாஸ் அகாதி (எம்.வி.ஏ) தலைவர்கள் ராகுல் காந்தியுடன் இணைந்து விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். பின்னர், பாரத் ஜோடோ நியாய் யாத்திரையின் ஒரு பகுதியாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் ராகுல் காந்தி ஒரு சாலைப் பேரணியை நடத்தவுள்ளார்.

ராகுல் காந்தியும் பாரத் ஜோடோ நியாய் யாத்திரையும்:

பாரத் ஜோடோ நியாய் யாத்திரையின் ஒரு பகுதியாக ராகுல் காந்தி, நாசிக்கின் திரிம்பகேஷ்வர் கோயிலுக்கும் செல்ல உள்ளார். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ராகுல் காந்தி, மகாராஷ்டிர மாநிலத்தின் துலேவிலிருந்து மாலேகானுக்கு வந்தடைந்தார்.

அதைத்தொடர்ந்து இன்றைய பாரத் ஜோடோ நியாய் யாத்திரை காலை நாசிக்கில் உள்ள பிம்பல்கான் பஸ்வந்த் மற்றும் ஓசார் வழியாக செல்ல உள்ளது. ராகுல் காந்தி, துவாரகா வட்டத்திலிருந்து ஒரு சாலைப் பேரணியை வழிநடத்துவார் மற்றும் ஷாலிமரில் ஒரு பொது உரையை வழங்குவார். அங்கு அவர் இந்திரா காந்தியின் சிலையையும் திறந்து வைப்பார்.

ராகுல் காந்தி நேற்று(மார்ச் 13ஆம் தேதி) துலேவின் அர்வியில் தனது திறந்த ஜீப்பில் இருந்து கூட்டத்தினரிடையே உரையாற்றினார். அதில், "காங்கிரஸ் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான உறுதியான உத்தரவாதத்தை பரிந்துரைக்கிறார்’’

ராகுல் காந்தி அளித்த உறுதிமொழிகள்:

மகாராஷ்டிர மாநிலத்தின், துலே மாவட்டத்தில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட ஐந்து வாக்குறுதிகளை அறிமுகப்படுத்தினார். இதில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்களின் வங்கிக் கணக்குகளில் ஆண்டுக்கு ரூ .1 லட்சம் டெபாசிட் செய்யப்படும் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அரசாங்கப் பதவிகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு கிடைக்கும் என்ற உறுதிப்பாடு ஆகியவை இந்த வாக்குறுதிகளில் ஒன்றாக இருக்கும். 

பாஜக தலைமையிலான அரசு அறிமுகப்படுத்திய சர்ச்சைக்குரிய 'அக்னிவீர்' எனப்படும் ராணுவத்தில் ஆட்சேர்ப்பு முயற்சியை விமர்சித்த காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சீன துருப்புக்களுடன் நேரடி மோதல்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று எச்சரித்தார். 

போர்க்கால சூழ்நிலைகளுக்கு வீரர்களைத் தயார்படுத்துவதற்கு 'அக்னிவீர்' திட்டத்தின் ஆறு மாத பயிற்சி காலம் போதுமானதாக இல்லை என்று ராகுல் காந்தி வாதிட்டார்.

கேரளா மாநிலத்தின் தற்போதைய தொகுதியான வயநாட்டில் இருந்து மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ள ராகுல் காந்தி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக, வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்த வேண்டும் என மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டார். 

மேலும், மக்களவைத் தேர்தலுக்கு மக்கள் வாக்குச்சீட்டுகள் வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், தேர்தல் ஆணையம் அதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அண்மையில் தேர்தல் ஆணையர் ஒருவர் ராஜினாமா செய்தார். தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு இது நடந்திருக்கிறது. இது சந்தேகத்தினைக் கிளப்புகிறது எனவும் ராகுல் காந்தி பேசினார்.

ராகுல் காந்தி, தனது பாரத் ஜோடோ நியோய் யாத்திரையின் மார்ச் 12ஆம் தேதி, மகாராஷ்டிராவின் நந்தூர்பாரில் தொடங்கி மார்ச் 17வரை, மும்பையில் ஒரு நிகழ்ச்சியுடன் முடிக்கவுள்ளார்.

ஜனவரி நடுப்பகுதியில் மணிப்பூரில் தொடங்கிய 'பாரத் ஜோடோ நியாய் யாத்திரை' மார்ச் 17 அன்று மும்பையில் ஒரு பேரணியுடன் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.