தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Opposition Meet: எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு I.n.d.i.a என்று பெயர் வைப்பு!

Opposition Meet: எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு I.N.D.I.A என்று பெயர் வைப்பு!

Kathiravan V HT Tamil
Jul 18, 2023 03:22 PM IST

”மாலை 4 மணிக்கு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் கூட்டணியின் பெயர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு”

பெங்களூருவில் நடந்த இரண்டாம் நாள் கூட்டத்தில் கூட்டணிக்கு பெயர் வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பெங்களூருவில் நடந்த இரண்டாம் நாள் கூட்டத்தில் கூட்டணிக்கு பெயர் வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ட்ரெண்டிங் செய்திகள்

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, ஐயூஎம்எல், கொமதேக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் தளம், ஆம் ஆத்மி, தேசிய மாநாட்டு கட்சி, தேசியவாத காங்கிரஸ், ஜார்க்கண் முக்தி மோர்ச்சா, காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட 26 கட்சிகள் பங்கேற்றுள்ளன.

எதிர்க்கட்சிகள் கூட்டம் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலிடம் கூட்டணிக்கு யார் தலைவர் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "எங்களிடம் போதுமான தலைவர்கள் உள்ளனர், பல்வேறு பதவிகளில் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர். நீங்கள் தலைவரைப் பற்றி கவலைப்பட வேண்டாம், நாட்டின் நிலையைப் பற்றி கவலைப்படுங்கள்" என்றார். கூட்டணிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற அதே பெயரைப் பயன்படுத்துவதா அல்லது புதிய பெயரை உருவாக்குவதா என்பது உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் எதிர்க்கட்சிகள் விரிவாக விவாதிக்கும் என்றும் வேணுகோபால் கூறி இருந்த நிலையில் இன்றைய கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு தலைவர்கள் கூட்டணிக்கு பெயர் வைப்பது குறித்து பல பரிந்துரைகளை அளித்திருந்தனர். 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்திய மக்கள் முன்னணி என்ற பெயரையும் விசிக தலைவர் திருமாவளவன் சேவ் இந்தியா அல்லது மதசார்பற்ற இந்திய கூட்டணி ஆகிய பெயர்களை பரிந்துரை செய்திருந்தனர்.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா (INDIA - INDIAN NATIONAL DEMOCRATIC INCLUSIVE ALLIANCE) என்ற பெயர் வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாலை 4 மணிக்கு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் கூட்டணியின் பெயர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

IPL_Entry_Point

டாபிக்ஸ்