தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Newzealand Minister Resign: கார் விபத்தை ஏற்படுத்திய நியூசிலாந்து அமைச்சர்! பதவி விலகுவதாக அறிவிப்பு

Newzealand Minister Resign: கார் விபத்தை ஏற்படுத்திய நியூசிலாந்து அமைச்சர்! பதவி விலகுவதாக அறிவிப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 25, 2023 11:33 AM IST

அதிகவேகமாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நியூசிலாந்து சட்டத்துறை அமைச்சர் உடனடியாக போலீஸ் கஸ்டடியில் எடுக்கப்பட்டார். விபத்துக்கு பின்னர் தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக கூறி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார்.

கார் விபத்தை ஏற்படுத்திய அமைச்சர் பதவி விலகல்
கார் விபத்தை ஏற்படுத்திய அமைச்சர் பதவி விலகல் (AP)

ட்ரெண்டிங் செய்திகள்

ரோஸ்னெத் பகுதி அருகே உள்ள ஈவன்ஸ் பே பரேட் என்ற இடத்தில் இரவு 9 மணியளவில் இரண்டு கார்கள் விபத்துக்குள்ளாகி இருப்பதாக போலீஸுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விபத்து ஏற்படுத்திய நபர் போலீசார் தங்களது கஸ்டடியில் எடுத்தனர்.

அப்போது விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை அவர் போலீசிடம் விளக்கியுள்ளார். இந்த விபத்தையடுத்து அந்த சாலை மூடப்பட்ட நிலையில், விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்துறை அமைச்சராக இருந்த ஆலன் வனக்குறைவாக வாகன ஓட்டியதாக கைது செய்யப்பட்டு, வெல்லிங்டன் மத்திய காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் அவர் திங்கள்கிழமை அதிகாலை 1 மணியளவில் விடுவிக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விவகாரம் குறித்து நியூசிலாந்த பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் கூறியதாவது: "சட்டத்துறை அமைச்சராக இருக்கும் ஒருவர் இன்னொரு அமைச்சரின் எச்சரிக்கையை பெறும் அளவுக்கு நடந்துகொள்ள கூடாது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆலன் பதவி விலகளை ஏற்றுக்கொள்கிறேன்.

அவர் தனது அனைத்து பதவிகளில் இருந்து விலகுவதாக என்னிடம் தெரிவித்தார். அரசயலில் தனது எதிர்காலம் குறித்து முடிவு எடுக்க போதிய கால அவகாசம் வேண்டும் என்று தெரிவித்ததாக" கூறினார்.

விபத்தை ஏற்படுத்தியதற்காக தனது அமைச்சர் பதவியை துறந்த நியூசிலாந்து சட்டத்துறை அமைச்சர் கிரி ஆலனின் இந்த செயல் ஆச்சயர்த்தை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்