தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Muslims Voters Support For Bjp Gujarat Election Results 2022

Gujarat election results 2022: முஸ்லீம் தொகுதிகளிலும் பாஜக வெற்றி!

Karthikeyan S HT Tamil
Dec 08, 2022 09:18 PM IST

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளிலும் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

வெற்றி கொண்டாட்டத்தில் பாஜக தொண்டர்கள்.
வெற்றி கொண்டாட்டத்தில் பாஜக தொண்டர்கள். (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மைக்கு 92 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜக வரலாற்று வெற்றியைப் பதிவு செய்து ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. அதேவேளையில் குஜராத்தில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது காங்கிரஸ் கட்சி. அந்த கட்சி 17 தொகுதிகளிலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆம்ஆத்மி 5 இடங்களிலும், மற்ற கட்சிகள் தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.

இந்த தேர்தலில் முக்கியமாக இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கக்கூடிய தொகுதிகளிலும் பாஜகவின் பெற்றி பிரகாசமாக உள்ளது. முஸ்லீம் வேட்பாளர்கள் ஒருவருக்கு கூட இந்தத் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பளிக்காத நிலையில், இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய தனி லிம்டா, தாரியாபூர், வக்ரா, சூரத் கிழக்கு, பூஜ், ஜம்புசார் உள்ளிட்ட 17 தொகுதிகளில் 12-ல் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 5 இடத்தில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

இஸ்லாமிய மக்கள் அதிகமுள்ள 17 தொகுதிகளில் 16-ல் ஆம் ஆத்மி வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால், அக்கட்சி தோல்வியையே தழுவியுள்ளது. பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேரும் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து இஸ்லாமிய ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தியது. இதை தங்களுக்கு சாதமாக பயன்படுத்த நினைத்தது காங்கிரஸ். எனினும் தேர்தல் முடிவுகள் எதிர்மாறாக உள்ளன.

IPL_Entry_Point

டாபிக்ஸ்