தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Mp : மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் விளக்கமளிக்க கோரி மத்திய அரசுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

MP : மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் விளக்கமளிக்க கோரி மத்திய அரசுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

Priyadarshini R HT Tamil
Jul 24, 2023 11:16 AM IST

MP Protest : மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமையை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் சார்பில் மத்திர அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

MP Protest : மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமையை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் சார்பில் மத்திர அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
MP Protest : மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமையை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் சார்பில் மத்திர அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ட்ரெண்டிங் செய்திகள்

 

2023ம் ஆண்டு மே 4ம் தேதி பெண் நிர்வாணமாக அழைத்துச்செல்லப்பட்ட வீடியோ வைரலான விவகாரத்தில் அதில் தொடர்புடைய 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மாநில போலீசார் எஞ்சிய குற்றவாளிகளை பிடிக்க போதிய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், குற்றவாளிகள் மறைந்துள்ளதாக சந்தேகப்படும் இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் மணிப்பூர் போலீசார் டிவீட்டில் தெரிவித்துள்ளனர்.

மே 18ம் தேதி இந்த வழக்கு தொடர்பான புகார் பெறப்பட்ட பின்னரும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், முதல் தகவல் அறிக்கை போட்ட பின்னரும் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படவில்லை என்றும் மணிப்பூர் போலீசார் மீது குற்றச்சாட்டு எழுந்தது. முதல் கைது வியாழக்கிழமை, சம்பவம் நடந்து 77 நாட்களுக்கு பின்னர் வீடியோ வைரல் ஆனவுடன் செய்யப்பட்டது.

அந்த வீடியோவில், பெண்களை நிர்வாணமாக்கி வயல் வெளிகளில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அந்தப்பெண்களை துன்புறுத்தி அழைத்துச் செல்வது பதிவாகியிருந்தது. இது ஏற்கனவே குக்கி மற்றும் மெய்தி மக்களிடையே வன்முறை நடந்து வரும் வேளையில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியது. மணிப்பூரில் நடந்துவரும் வன்முறையில் கிட்டத்தட்ட 150 பேர் கொல்லப்பட்டதுடன், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மாநிலத்திலும், நாட்டின் பல்வேறு இடங்களில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் விளக்கமளிக்க கோரி, நாடாளுமன்றம் முன் இன்று எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

டெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபற்று வருகிறது. அதில் மணிப்பூர் சம்பவம் தொடர்பாக குறுகிய நேர விவாதத்துக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்கவும் மத்திய அரசு ஒப்புக்கொண்டது. ஆனால் இந்த விவகாரத்தில் முதலில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பிடிவாதமாக இருந்தன. இந்த விவகாரத்தில் நேரக் கட்டுப்பாடின்றி அனைத்துக் கட்சிகளும் பேசி விவாதம் நடத்தவும் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தின.

இதுதொடர்பாக அமளி நீடித்ததால், கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே இரு அவைகளும் எந்த அலுவலையும் கவனிக்காமல் முடங்கின. இந்நிலையில், புதிதாக இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ள எதிர்க்கட்சிகள், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் அறையில் சந்திக்கவும், நாடாளுமன்றத்தில் தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கவும் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தன. அதைத்தொடர்ந்து, இன்று இரு அவைகளிலும் நுழையும் முன்னர், மணிப்பூர் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்கக்கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன் போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. அதன்படி இன்றைய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்