தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Maruti Suzuki Offers Discounts On Cars For Festival

Maruti Suzuki Offers: கார்களுக்கு சலுகைகளை அள்ளிக் கொடுக்கும் மாருதி சுசுகி!

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 20, 2022 11:58 PM IST

பண்டிகை காலத்தை முன்னிட்டு மாருதி சுசுகி நிறுவனம் சில முக்கிய கார்களுக்கு தள்ளுபடி சலுகைகளை வழங்குகிறது.

மாருதி சுசுகி கார்கள்
மாருதி சுசுகி கார்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

தற்போது மாருதி சுசுகி நிறுவனம் பண்டிகை கால சிறப்பு தள்ளுபடிகளுடன் போன்ற சிறந்த மாடல்களை உங்களுக்கு வழங்க உள்ளன.

சியாஸ் (Ciaz)

செடான் கார் பிரிவில் மிடில் ரேஞ்ச் காராக உருவாக்கப்பட்டது இந்த சியாஸ். மாருதி சுசுகி தரும் சலுகைகள் காரணமாக இந்த சியாஸ் மாடலானது வாடிக்கையாளர்கள் மத்தியில் நிலைத்து நிற்கிறது. கடந்த ஆண்டு சியாஸ் கார் மூன்று லட்சம் மின்வெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த காருக்கு 48 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகிறது.

இக்னிஸ் ( ignis)

பட்ஜெட்டில் அடங்கக்கூடிய மிகச்சிறந்த கார்களின் இந்த இக்னிஸ் காரும் ஒன்று. இந்த காருக்கு வாடிக்கையாளர் செல்களாக 10 ஆயிரம் ரூபாயும் எக்சேஞ்ச் சலுகையாக 15 ஆயிரம் ரூபாயும், கிராமப்புற கூட்டுறவு சலுகையாக 5,100 ரூபாயும், சகுன் சலுகையாக 3,500 ரூபாயும் தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகிறது.

எக்ஸ் எல் 6 எம்பிவி (XL6 Mpv )

இந்த கார் டொயோட்டோ நிறுவனத்தின் இனோவா காருக்கு நிகரான இடத்தை பிடித்துள்ளது. இது மாருதி சுசுகி நெக்ஸாவின் கீழ் விற்கப்படுகிறது. ப்ரீமியம் எம்பிவி வகையான இந்த காருக்கு 48 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகிறது.

IPL_Entry_Point