தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Viral Photo: மேஜர் பீனா திவாரியை ஆரத் தழுவிய துருக்கி பெண்!

Viral Photo: மேஜர் பீனா திவாரியை ஆரத் தழுவிய துருக்கி பெண்!

Manigandan K T HT Tamil
Feb 20, 2023 01:45 PM IST

Turkey Earthquake: துருக்கியில் மருத்துவ உதவிக்காக இந்தியாவில் இருந்து மருத்துவக் குழுவில் இருந்தவர் தான் மேஜர் பீனா திவாரி.

மேஜர் பீனா திவாரியை ஆரத் தழுவிக் கொண்ட துருக்கி பெண்
மேஜர் பீனா திவாரியை ஆரத் தழுவிக் கொண்ட துருக்கி பெண்

ட்ரெண்டிங் செய்திகள்

துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. பலி எண்ணிக்கை 30ஆயிரத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

மிகப் பெரிய சோகமான சம்பவங்களில் ஒன்றாக வரலாற்றில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்திய அரசு, மனிதாபிமான அடிப்படையில் மீட்புப் படைகளை அனுப்பி உதவியது.

அவர்களுடன் மருத்துவக் குழுவும் உடன் சென்றது. 12 நாட்களுக்குப் பிறகு இந்தியாவுக்கு அந்தக் குழு நேற்றுதான் திரும்பியது. சுமார் 3600 பேருக்கு இந்திய மருத்துவக் குழு சிகிச்சை அளித்தது.

மேஜர் பீனா திவாரி இந்திய ராணுவத்தில் மெடிக்கல் ஆபிசராக பணிபுரிந்து வருகிறார். அவர் துருக்கி பெண்ணை ஆரத் தழுவிக் கொள்வது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுதொடர்பாக ANI செய்தியாளரிடம் பீனா திவாரி பகிர்ந்து கொண்டதாவது:

துருக்கியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இடிபாடுகளுக்கு நடுவே ஒரு தற்காலிக மருத்துவமனையை அமைக்கவே கடும் சவாலாக இருந்தது.

துருக்கிக்கு சென்ற சில மணி நேரங்களில், நமது ராணுவம் மருத்துவமனையை அமைத்தது. கிட்டத்தட்ட 24 மணிநேரமும் ஆயிரக்கணக்கானோரை கவனித்து வந்தோம்.

துருக்கி அரசும் எங்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருந்தது. உள்ளூர் மக்களும் கணிவுடன் கவனித்துக் கொண்டனர். 11 முதல் 12 நாட்களுக்குப் பிறகு 3,600க்கும் அதிகமான காயமடைந்தவர்கள் அங்கு வந்தனர். சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைத்ததால் துருக்கி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நாம் அதை சாதித்துவிட்டோம் என நினைக்கிறேன்.

மொழிபெயர்க்கவும், மருந்துகள் கிடைக்கவும் துருக்கி அதிகாரிகள் மிகவும் உதவியாக இருந்தனர். உள்ளூர் மருத்துவர்களும் எங்களுடன் இணைந்து பணியாற்றினர் என்றார் பீனா திவாரி.

அவர் மருத்துவமனையில் உதவியபோதுதான் துருக்கியைச் சேர்ந்த ஒரு பெண் ஆரத் தழுவி நன்றி தெரிவித்துள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்