NEET exam results: ‘நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும்!’ பாஜக அங்கம் வகிக்கும் மகாராஷ்டிர அரசு போர்கொடி!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Neet Exam Results: ‘நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும்!’ பாஜக அங்கம் வகிக்கும் மகாராஷ்டிர அரசு போர்கொடி!

NEET exam results: ‘நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும்!’ பாஜக அங்கம் வகிக்கும் மகாராஷ்டிர அரசு போர்கொடி!

Kathiravan V HT Tamil
Jun 08, 2024 02:56 PM IST

NEET exam results: 'நீட் தேர்வு முடிவுகளில் மகாராஷ்டிர மாநில மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளதாகவும், தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் அம்மாநில அரசு கோரிக்கை விடுத்து உள்ளது’

NEET exam results: ‘நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும்!’ பாஜக அங்கம் வகிக்கும் மகாராஷ்டிர அரசு போர்கொடி!
NEET exam results: ‘நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும்!’ பாஜக அங்கம் வகிக்கும் மகாராஷ்டிர அரசு போர்கொடி! (PTI)

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசில் பாஜக அங்கம் வகித்து வருகிறது. கடந்த மாதம் நடந்த நீட் தேர்வின் முடிவுகளில், மகாராஷ்டிராவை சேர்ந்த மாணவர்களுக்கு அநீதி இழைத்துள்ளதாகவும், அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் மகாராஷ்டிர அரசு கோரி உள்ளது.

நீட் தேர்வு என்றால் என்ன?

இளங்கலை நீட் தேர்வு என்பது MBBS, BDS, BAMS, BSMS, BUMS, BHMS மற்றும் BSc நர்சிங் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வாகும். நாட்டில் உள்ள 540க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் 80,000 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.

ஒரே தேர்வு மையத்தில் 6 பேர் முதலிடம் 

கடந்த மே 5ஆம் தேதி அன்று 571 நகரங்களில் 4,750 மையங்களில் நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் ஹரியானாவில் ஒரே தேர்வு மையத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 67 பேர் முதல் தரவரிசையில் இடம் பெற்று உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து உள்ளது.

தேசிய தேர்வு முகமை விளக்கம் 

நீட் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், தேசிய தேர்வு முகமை, இதில் எந்த முறைகேடும் இல்லை என்றும், NCERT பாடப்புத்தகங்களில் செய்யப்பட்ட மாற்றங்களும், தேர்வு மையங்களில் நேரத்தை இழப்பதற்கான கருணை மதிப்பெண்களும்தான் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்குக் காரணம் என்று விளக்கம் அளித்து இருந்தது.

நீட் தேர்வு முடிவுகளுக்கு மகாராஷ்டிர அரசு எதிர்ப்பு 

இதுகுறித்து மகாராஷ்டிர மருத்துவக் கல்வி அமைச்சர் ஹசன் முஷ்ரிப் கூறுகையில், "நீட் தேர்வு பணம் வாங்கிக் கொண்டு நடத்தப்பட்டிருக்கலாம். மகாராஷ்டிராவைச் சேர்ந்த எந்த மாணவர்களும் மாநிலத்தில் உள்ள அரசு அல்லது தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் சேராத வகையில் நீட் தேர்வு முடிவுகள் வந்துள்ளன" என குற்றம்சாட்டி உள்ளார்.

நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய கோரிக்கை 

தொடர்ந்து பேசிய அவர், பல மாணவர்களின் பெற்றோர்கள் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணக் கோரி தன்னை அணுகியதாகவும், இது மகாராஷ்டிராவுக்கு அநீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தேர்வு முடிவுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதுபற்றி என்எம்சியிடம் புகார் தெரிவிக்க உள்ளோம், நீதிமன்றத்தை அணுகுவது குறித்தும் அரசாங்கம் ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார். 

காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு

நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக அரந்சு மீது காங்கிரஸ் கட்சி விமர்சனங்களை முன் வைத்து உள்ளது. உது தொடர்பாக கருத்து தெரிவித்து உள்ள காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி வத்ரா “முதலில் நீட் தேர்வுத் தாள் கசிந்த நிலையில், தற்போது அதன் முடிவுகளிலும் முறைகேடு நடந்துள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஒரே மையத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றிருப்பது குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டு, பலவிதமான முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வருகின்றன. மறுபுறம், தேர்வு முடிவுகள் வெளியான பிறகு நாடு முழுவதும் ஏராளமான குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இது மிகவும் வருத்தமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது.

லட்சக்கணக்கான மாணவர்களின் குரலை அரசு புறக்கணிப்பது ஏன்? நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு தொடர்பான முறையான கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் அளிக்க வேண்டும். இந்த முறையான புகார்களை விசாரித்து தீர்வு காண்பது அரசின் பொறுப்பு அல்லவா?” என பிரியங்கா காந்தி வதேரா கூறி உள்ளார்.

நீட் தேர்வு கூட்டாட்சி கொள்கைக்கு எதிரானது 

நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கருத்து தெரிவித்து உள்ளார். சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன.

வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட மையங்களில் இருந்து மொத்தமாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், கருணை மதிப்பெண்கள் என்ற போர்வையில் நடைமுறைக்குச் சாத்தியமற்ற அளவில் மதிப்பெண்களை அள்ளி வழங்குவது போன்ற குழப்பங்கள் தற்போதைய ஒன்றிய அரசின் அதிகாரக்குவிப்பின் குறைபாடுகளை வெட்டவெளிச்சமாக்குகின்றன.

இவை, தொழிற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகள் மற்றும் பள்ளிக் கல்வி முறை மீண்டும் முதன்மை பெற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.

மீண்டும் ஒருமுறை அழுத்தந்திருத்தமாகச் சொல்கிறோம்:

🎯நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கு எதிரானவை.

🎯அவை கூட்டாட்சியியலை சிறுமைப்படுத்துபவை.

🎯 சமூகநீதிக்கு எதிரானவை.

🎯 தேவையுள்ள இடங்களில் மருத்துவர்களின் இருப்பை பாதிப்பவை.

#NEET எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோப்போம்! நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை! என கூறி உள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.