தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Lpg Blast: சீனாவில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - 31 பேர் பலி

LPG Blast: சீனாவில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - 31 பேர் பலி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 22, 2023 12:57 PM IST

சமையலுக்கு பயன்படுத்தப்படும் எல்பிஜி கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 31 பேர் உயிரழ்ந்த கோர சம்பவம் சீனாவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் நிகழ்ந்துள்ளது.

சீனா நிங்சியா ஹுய் பகுதியில் நிகழ்ந்த வெடி விபத்தில் மீட்பு பணிகளில் ஈடுபடும் மீட்பு குழுவினர்
சீனா நிங்சியா ஹுய் பகுதியில் நிகழ்ந்த வெடி விபத்தில் மீட்பு பணிகளில் ஈடுபடும் மீட்பு குழுவினர் (AP)

ட்ரெண்டிங் செய்திகள்

அங்கு பாரம்பரியமாக டிராகன் படகு திருவிழா நிகழ்வில் பங்கேற்பதற்காக ஏராளமான மக்கள் தெருக்களில் கூடியிருந்தனர். இதையடுத்து அங்கிருந்த ரெஸ்ட்ராண்டில் இந்த வெடிவிபத்தானது ஏற்பட்டுள்ளது.

இதில் 31 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 7 பேர் உடல் மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தின் சத்தத்தை சுமார் 50 மீட்டர் தூரத்திலேயே உணர்ந்தாகவும், ரெஸ்ட்ராண்டை சேர்ந்த பணியாளர் ஒருவர் சுருண்டு விழுந்ததை நேரில் பார்த்ததாகவும் பெண் ஒருவர் கூறியுள்ளார்.

விபத்துக்கு பின்னர் மீட்பு பணிகள் அங்கு உடனடியாக நடைபெற்றது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 102 பேர் அந்த இடத்திலிருந்து மீட்பு குழுவினரால் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெடி விபத்து நிகழ்ந்த பகுதி சீனாவில் முஸ்லீம்கள் வாழும் பகுதியாக இருந்து வருகிறது. சீனாவில் சுமார் 20 மில்லியன் முஸ்லிம்கள் வசித்து வருவதாக கூறப்படும் நிலையில். துருக்கி மற்றும் சீன வம்சாவளியை இனக்குழுக்களாக உள்ளார்கள். இவர்கள் ஹுய் முஸ்லிம்கள் என்று அழைக்கப்படுகிறரார்கள்.

இந்த விபத்து நிகழ்வதற்கு சுமார் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக ரெஸ்ட்ராண்டில் ஊழியர்கள் கேஸ் வாசனை வெளியேறுவதை கண்டறிந்துள்ளனர். அப்போது சோதித்து பார்த்ததில் கேஸ் நிரப்பபட்டுள்ள டேங்க் லேசாக உடைந்திருப்பதை தெரியவந்த நிலையில், அதன் வால்வை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தான் இந்த விபத்து ஏற்பட்டதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் சீனா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்