தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Indian Navy Need Atleast 100 Locally Made Deck Based Fighters

இந்திய கப்பற்படைக்கு உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 100 போர் விமானங்கள் தேவை

Priyadarshini R HT Tamil
Feb 15, 2023 01:19 PM IST

Aero Expo 2023: முதல் முன்மாதிரி வகை இரட்டை இன்ஜின் கொண்ட டெக் அடிப்படையிலான போர் விமானம் தனது முதல் பயணத்தை 2026ல் துவங்கும். 2031ல் தயாரிப்புக்கு ஆயத்தமாக இருக்கும்.

ஏரோ இந்தியா 2023ல் இடம்பெற்றுள்ள போர் விமானம்.
ஏரோ இந்தியா 2023ல் இடம்பெற்றுள்ள போர் விமானம்.

ட்ரெண்டிங் செய்திகள்

முதல் முன்மாதிரி வகை இரட்டை இன்ஜின் கொண்ட டெக் பேஸ்ட் போர் விமானம் தனது முதல் பயணத்தை 2026ல் துவங்கும். 2031ல் தயாரிப்புக்கு ஆயத்தமாக இருக்கும் என்று கிரிஷ் தியோதர் தெரிவித்தார். இவர் விமான வளர்த்தி ஏஜென்சியின் இயக்குனராக உள்ளார். இந்திய கடற்படை நமது போர் விமானம் தயாராவதற்கு முன்னதாக அதன் தேவைக்கு இறக்குமதி செய்யும் என்று தெரிவித்தார். ஓராண்டு எட்டு போர் விமானங்கள் என புதிய போர் விமானங்கள் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் தயாரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்திற்கு 26 புதிய டெக் அடிப்படையிலான போர் விமானங்களுடன் கடற்படையை ஆயத்தப்படுத்துவதற்கான நேரடி போட்டியில் பிரெஞ்சு ரபேல் எம் போர் விமானம் அமெரிக்க எப்/ஏ 18 சூப்பர் ஹார்னெட்டை வீழ்த்தியுள்ளது. கடற்படையிடம் தற்போது ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் விக்ரமாதித்தியா என்ற இரண்டு விமானம் தாங்கி கப்பல்கள் உள்ளன. 

ரபேல் எம்மின் திறன்களை நமது புதிய போர் விமானம் கொண்டிருக்கும் என்று தியோதர் தெரிவித்துள்ளார். ரபேல் விமானத்தை தாசால்ட் ஏவியேசன் தயாரிக்கிறது. சூப்பர் ஹார்னெட் ஒரு போயிங் வகையைச் சேர்ந்த தயாரிப்பாகும். 

நமது தயாரிப்பில் இலகுரகமானதாகவும், பயன்படுத்த எளிதாகவும் இருக்கக்கூடிய ஒன்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். தற்போது அதற்கான முதன்மைகட்ட நிலையில் உள்ளது. விரைவில் அது முழு வடிவம் பெறும். இறக்கையை மடித்துக்கொள்ளும் வசதி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அப்போதுதான் விமானதாங்கி கப்பல்களில் குறைந்தளவு இடத்தை அது ஆக்கிரமிக்கும் என்று தியோதர் கூறினார். இந்தியா தற்போது உருவாக்கியுள்ள இந்த புதிய தொழில்நுட்பம் புதிய ரக விமானங்களை உருவாக்க உதவும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்