Prashant Kishore: ’பாஜகதான் ஆட்சி அமைக்கும்! மோடியை வீழ்த்தனும்னா இதை பண்ணுங்க!’ பிரசாந்த் கிஷோர் பேட்டி
’பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால் வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் 100 தொகுதியில் தோல்வி அடைய செய்ய வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் கூறி உள்ளார்’

2024 லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) "பெரும் பலன்" கிடைக்கும் என்று அரசியல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர் தெரிவித்து ள்ளார்.
ஆந்திர ஊடகத்திற்கு பிரசாந்த் கிஷோர் பேட்டி
ஆர்டிவி ஆந்திரப் பிரதேசம் என்ற ஊடகத்திற்கு பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில், பாஜகவை மத்தியில் ஆட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டுமானால், வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் 100 மக்களவைத் தொகுதிகளை அந்தக் கட்சி இழக்க வேண்டும், கிழக்கு மற்றும் தென் இந்தியாவில் எந்த இடங்களையும் பெறமால் இருக்க வேண்டும் என கூறினார்.
பாஜகாவல் 400 இடங்களில் வெல்ல முடியுமா?
மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 370-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "எல்லாம் யூகமே, யார் எத்தனை இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்பது யாருக்கும் தெரியாது" என்று கூறினார். ஆனால், "தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பாஜக வெற்றிபெறக்கூடிய இடங்கள் குறையும் என்று நான் நினைக்கவில்லை” என்று பிரசாந்த் கிஷோர் கூறி உள்ளார்.