தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Upcoming Bikes: அடுத்தது ஹோண்டா தான் போல - லிஸ்ட் ரெடியா இருக்கு..!

Upcoming Bikes: அடுத்தது ஹோண்டா தான் போல - லிஸ்ட் ரெடியா இருக்கு..!

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 11, 2023 11:18 AM IST

ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்தத் திட்டத்தில் வைத்திருக்கும் புதிய ஆறு வாகனங்கள் குறித்து இங்கே காண்போம்.

ஹோண்டா
ஹோண்டா

ட்ரெண்டிங் செய்திகள்

வாடிக்கையாளர்களுக்கு தற்போது எலக்ட்ரிக் வாகனங்களின் மீது நாட்டம் அதிகரித்துள்ளதால், முன்னணி நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.

அதேபோல் புது நிறுவனங்களின் வருகையும் இந்தியாவில் அதிகரித்துள்ளன. அந்த வகையில் தற்போது இந்தியாவில் இருசக்கர வாகன நிறுவனங்களில் முன்னணியில் இருந்து வரும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹோண்டா நிறுவனம் புதிய இருசக்கர வாகனங்களில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் புதிய ஆறு இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஹோண்டா நிறுவனம் ஆட்டோமொபைல் சங்கத்தில் பல வாகனங்களை patent மாதிரியாகப் பதிவு செய்துள்ளது. அந்த வாகனங்களின் பட்டியலை இங்கே காண்போம்.

ஹோண்டா CB350 க்ரூஸர் பைக் (Honda CB350 Cruiser)

ஹோண்டா நிறுவனம் மற்ற நிறுவனங்களுக்கு போட்டியாக CB350 Highness, Honda CB350RS கிருஸர் பைக்கை உருவாக்க உள்ளது. இது Honda Rebel சீரிஸ் பைக்குகளை போல டிசைன் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. இது ஒருவேளை Cruiser அல்லது Roadster பைக்காக இருக்க வாய்ப்புள்ளது.

ஹோண்டா ஆக்டிவா EV (Honda Activa EV)

ஹோண்டா நிறுவனத்தின் முக்கிய ஸ்கூட்டராகவும், வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் விரைவில் எலக்ட்ரிக் மாடல் ஒன்று வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் வரும் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் சார்ஜிங் வசதி வேலைகளை ஹோண்டா நிறுவனம் செய்து வருகிறது.

ஹோண்டா 125cc ஸ்கூட்டர் (Honda 125cc scooter)

ஹோண்டா நிறுவனம் இந்த 125cc கொண்ட ஸ்கூட்டரை 2024 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது TVS NTorq, Suzuki Avenis போன்ற ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் H-Smart வசதி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

CB300F அட்வென்ச்சர் பைக் (Honda CB300F adventure bike)

ஹோண்டா நிறுவனம் ஏற்கனவே CB300F என்ற மாடலை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்த மாடலில் அட்வென்ச்சர் பைக் ஒன்றை அறிமுகம் செய்யும் என எதிர்பார்ர்க்கபடுகிறது. இதில் அதே டைமென்ட் பிரேம், ஆயில் கூலிங் போன்ற வசதிகள் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஹோண்டா 160cc பைக் (Honda 160cc)

166cc கொண்ட இந்த பைக் X-Blade பைக் உருவாக்கப்பட்ட அதே பிளேட்போர்மில் உருவாக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இது பஜாஜ் பல்சர் 160, டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 போன்ற பைக்குகளுக்கு போட்டியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்