தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Gujarat Assembly Elections 2022, Rivaba Jadeja Won By 40,000 Votes

Gujarat election results 2022: கிரிக்கெட் வீரர் ஜடேஜா மனைவி ரிவாபா அபார வெற்றி!

Karthikeyan S HT Tamil
Dec 08, 2022 02:52 PM IST

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா 53,570 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ரவீந்தர ஜடேஜா, ரிவாபா
ரவீந்தர ஜடேஜா, ரிவாபா (ANI)

ட்ரெண்டிங் செய்திகள்

குஜராத்தில் ஆட்சி அமைக்க மொத்தமுள்ள 182 தொகுதிகளில் குறைந்தபட்சம் 92 இடங்களில் வெற்றி பெற வேண்டும். குஜராத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்திருத்தன.

இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், இந்தத் தேர்தலில் பலரது கவனத்தை ஈர்த்த வேட்பாளர்களில் ஒருவரான இந்திய கிரிகெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்தர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா வெற்றி பெற்றிருக்கிறார். இவர் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார்.

தொடக்கத்தில் 3ஆவது இடத்தில் இருந்த ரிவாபா படிபடிப்படியாக முன்னிலை பெற்று சுமார் 53,570 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து ஜாம் நகர் வடக்குத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிபேந்திர சிங் ஜடேஜாவும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் அஹிர் கர்ஷன்பாய் பர்பத்பாய் கர்முரும் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளனர்.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ள ரிவாபா கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பாஜகவில் இருந்து வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்த ரிவாபா, ஜாம் நகர் வடக்குத் தொகுதியில் போட்டியிடும் நோக்கில் பல்வேறு மக்கள் நலப் பணிகளை அங்கு ஏற்கனவே செய்யத் தொடங்கினார். அவர் எதிர்பார்த்தது போலவே, ஜாம் நகர் வடக்குத் தொகுதி போட்டியிட பாஜக அவருக்கு வாய்ப்பு வழங்கியது. தேர்தலில் வெற்றி பெரும் நோக்கில் மிகத் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டார். அதற்கு அவரது கணவர் ரவீந்திர ஜடேஜாவும் உதவினார். அவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்