Emergency row: ’இனி ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை தினம்!’ கோதாவில் குதித்த மோடி அரசு! காங்கிரஸ்க்கு ஆப்பு ரெடி!
Samvidhaan Hatya Diwas: ஜூன் 25, 1975 அன்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசு அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்தியது.

Emergency row: ’இனி ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை தினம்!’ கோதாவில் குதித்த மோடி அரசு! காங்கிரஸ்க்கு ஆப்பு ரெடி! (PTI)
ஆண்டுதோறும் ஜூன் 25-ஆம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக (சம்விதான் ஹத்யா திவாஸ்) கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஜூன் 25, 1975 அன்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசு அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்தியது.
அமித்ஷா ட்வீட்
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, “1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, தனது சர்வாதிகார மனநிலையைக் காட்டி, நாட்டில் எமர்ஜென்சியை கொண்டு வந்து இந்திய ஜனநாயகத்தின் ஆன்மாவை நெரித்தார். எந்த காரணமும் இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் என தெரிவித்து உள்ளார்.
