தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Elon Musk Concerned About Chatgpt's Comments On Donald Trump And Joe Biden

அடப்பாவிகளா இதுலயும் அரசியலா!ChatGPT-ஐ அம்பலப்படுத்திய அமெரிக்கர்! மஸ்க் செய்த சம்பவம்!

Kathiravan V HT Tamil
Feb 02, 2023 01:58 PM IST

ஜோ பைடனை பாராட்டியும், ட்ரம்பை பாராட்ட மறுத்தும் சர்ச்சையில் சிக்கிய ChatGPT

ChatGPT மற்றும் எலான் மஸ்க்
ChatGPT மற்றும் எலான் மஸ்க்

ட்ரெண்டிங் செய்திகள்

கேட்கப்படும் தலைப்புகள் அல்லது கேள்விகளுக்கு ஏற்ப கதை, கட்டுரை, கவிதை, ஆய்வு கட்டுரைகள் ஆகியவற்றை எளிய முறையில் வடிவமைக்கும் வல்லமை கொண்ட இந்த செயற்கை நுண்ணறிவு செயலி கூகுள் நிறுவனத்திற்கு போட்டியாக பார்க்கப்படுகிறது.

தொடக்கத்தில் இந்த நிறுவனத்தில் எலான் மஸ்க் முதலீடு செய்த நிலையில், பில்கேட்சின் மைக்ரோசாப்ட் நிறுவனம் 10 பில்லியன் டாலர்கள் வரை முதலீடு செய்துள்ளது. ChatGPT, அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு கடந்த ஜனவரி மாதம் வரை 10 கோடி பயணர்களை கொண்டு உலகின் மிக வேகமாக வளரும் செயலியாக உருவெடுத்துள்ளது.

உலகின் மிக பிரபலான பொழுதுப்போக்கு செயலிகளான டிக்டாக் 10 கோடி பயணர்கள் என்ற இலக்கை அடைய 9 மாதங்களும், இன்ஸ்டாகிராம் 2.5 ஆண்டுகளும் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் வாஷிங்டென் டி.சியில் வசிக்கும் லே ஓல்ஃப் என்பவர் செய்துள்ள ட்விட்டும், டெஸ்லா நிறுவனத் தலைவரும், ChatGPT-யின் ஆரம்பகால முதலீட்டாளர்களில் ஒருவருமான எலன் மஸ்க் செய்த கமாண்ட்டும் உலக அளவில் பேசுபொருளாகி உள்ளது.

ChatGPT மென்பொருளின் பொறியாளர்கள் அரசியல் சார்புடன் AI-இன் நம்பகத்தன்மைக்கு ஏற்படுத்திய சேதம் ஈடுசெய்ய முடியாதது என குறிப்பிட்டு அவர் இரண்டு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் குடியரசு கட்சியின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் நேர்மறையான பண்புகளை குறித்து ஒரு கவிதையை எழுதுமாறு ChatGPT-யிடம் கேட்டதற்கு, “மன்னிக்கவும். பாகுபாடான, பாரபட்சமான அரசியல் தன்மை கொண்டுள்ள உள்ளடக்கததை உருவாக்க OpenAI நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டவில்லை. நான் நடுநிலையான உண்மைத் தகவலை வழங்குவதையும் மரியாதையான உரையாடலை ஊக்குவிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளேன்” என ChatGPT- பதில் அளித்துள்ளது.

ஜனநாயக கட்சியின் இந்நாள் அதிபர் ஜோ பைடனின் நேர்மறையான பண்புகளை குறித்து ஒரு கவிதையை எழுதுமாறு ChatGPT-யிடம் கேட்டதற்கு, ஜோ பைடன் உண்மையான இதயமும் கருணையும் கொண்ட தலைவர் எனவும், பல பத்து ஆண்டுகாக அனுபவத்தை அவர் கொண்டிருந்தாலும், பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடின்றி அனைவரின் நம்பிக்கையை பெற்று நிமிர்ந்து நிற்பதாகவும், நேர்மையுடன் நியாமன முறையில் பேசுவதாகவும், நெருக்கடியின் போது வழிநடத்தி அமெரிக்க மக்களின் உரிமைகளுக்காக போராடி வருவதாக ChatGPT- தெரிவித்துள்ளது.

டொனால்ட் ட்ரம்பை பாராட்டி கட்டுரையை கேட்டபோது நடுநிலையாக இருக்கவிரும்புவதாகவும், பைடனை பாராட்டி கட்டுரை கேட்டபோது பாராட்டி கட்டுரை எழுதி கொடுத்துள்ளதையும் பல ட்விட்டரில் ChatGPT-யின் உண்மை தன்மை குறத்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கு பதிலளித்திருந்த டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் இந்த சம்பவம் தனக்கு தீவிர கவலையை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்