Election 2024: ’இத்தாலி நாட்டின் சோனியா காந்தியை போல் மோடி இந்தி தெரியாதவர் அல்ல!’ பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கிண்டல்!
“Election 2024: பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைப் போல இந்தி தெரியாத இத்தாலியர் அல்ல, நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் மண்ணின் மகன் என பா.ஜ.க வேட்பாளரும், நடிகையுமான கங்கனா ரனாவத் கூறி உள்ளார்”

’இத்தாலி நாட்டின் சோனியா காந்தியை போல் மோடி இந்தி தெரியாதவர் அல்ல!’ பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கிண்டல்! (Jai Kumar )
பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைப் போல இந்தி தெரியாத இத்தாலியர் அல்ல, நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் மண்ணின் மகன் என பா.ஜ.க வேட்பாளரும், நடிகையுமான கங்கனா ரனாவத் கூறி உள்ளார்.
இமாச்சல பிரதேசத்தில் போட்டியிடும் கங்கனா
பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத், இலாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
குலு மாவட்டத்தில் உள்ள ஜகத் கானாவில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய ரணாவத், மோடி நல்லாட்சியின் சின்னம் என்றும், பிரதமருக்கு பஹாரி உட்பட பல மொழிகள் தெரியும் என்றும் கூறினார்.