தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Election Commission : 86 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து -இந்திய தேர்தல் ஆணையம்!

Election Commission : 86 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து -இந்திய தேர்தல் ஆணையம்!

Divya Sekar HT Tamil
Sep 14, 2022 02:25 PM IST

தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநிலங்களைச் சார்ந்த பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத 253 மாநில கட்சிகளை செயல்படாதவை என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கோரி பதிவு செய்யும் அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறவேண்டுமென்றால் மாநில சட்டமன்ற தேர்தல்களிலும், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலும் தனித்தோ, கூட்டணியாகவோ குறிப்பிட்ட சதவீதம் வாக்குகளை பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.

அதேபோல 6 ஆண்டுகள் கட்சிகள் தொடர்ச்சியாக தேர்தலில் நிற்கவில்லை என்றால் அத்தகைய கட்சிகள் பதிவு செய்யப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தனது அறிவிப்பில் கூறியுள்ளது.

அதன்படி, 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாமல் இருந்த 86 கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. இதுவரை பதிவு செய்யப்பட்டு, அங்கீகாரம் பெறாத 253 கட்சிகளையும் செயல்படாத கட்சிகள் எனக் குறிப்பிட்டு பட்டியலை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

 இதில் தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஏழு கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவை,

1. கொங்கு நாடு ஜனநாயக கட்சி

2. மக்கள் மறுமலர்ச்சி முன்னேற்ற கழகம்

3. எம்ஜிஆர் தொண்டர்கள் கட்சி

4.Patriot " தேசபக்தி"

5. புதிய நீதிக் கட்சி

6. தமிழ் மாநில காயிதே மில்லத் கழகம்

7. தமிழர் கழகம் உள்ளிட்ட ஏழு கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் செயல்படாத கட்சிகள் என தமிழகத்தை சேர்ந்த 14 கட்சிகளின் பெயரை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி,

1.தமிழர் கட்சி,

2.தமிழக மக்கள் ஜனநாயக கட்சி

3. தமிழ் மாநில திராவிட முன்னேற்ற கழகம்

4.தமிழ் தேசியக் கட்சி

5.சமூக சமத்துவ படை

6.சக்தி பாரத தேசம்

7. நமது திராவிட இயக்கம்

8.மக்கள் மறுமலர்ச்சி முன்னேற்ற கழகம்

9. மாநில கொங்கு பேரவை

10.லெனின் கம்யூனிஸ்ட் கட்சி

11.கொங்கு நாடு முன்னேற்ற கழகம்

12.தேசிய நலக் கட்சி

13. காமராஜர் ஆதித்தனார் கழகம்

14. இந்துஸ்தான் தேசிய கட்சி ஆகிய 14 கட்சிகளும் செயல்படாத கட்சிகள் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்