World Heritage Day 2024: இன்று உலக பாரம்பரிய தினம்! இந்திாவில் இருக்கும் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற தலங்கள் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  World Heritage Day 2024: இன்று உலக பாரம்பரிய தினம்! இந்திாவில் இருக்கும் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற தலங்கள் தெரியுமா?

World Heritage Day 2024: இன்று உலக பாரம்பரிய தினம்! இந்திாவில் இருக்கும் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற தலங்கள் தெரியுமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 18, 2024 05:00 AM IST

உலக பாரம்பரிய தினம் 2024: இதன் வரலாற்றில் இருந்து முக்கியத்துவம் வரை, இந்த சிறப்பு மிக்க நாள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்

இந்தியாவில் இருக்கும் பாரம்பரிய தலங்கள்
இந்தியாவில் இருக்கும் பாரம்பரிய தலங்கள்

பாரம்பரிய கட்டிடங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களுக்கு பாதுகாத்து வைப்பதென்பது மிக முக்கியமான தேவையாக இருந்து வருகிறது. அவற்றின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், உலகின் பாரம்பரியச் சொத்துக்களைப் பாதுகாப்பதில் மக்கள் ஒன்றிணையுமாறு வலியுறுத்துவதும் தான் உலக பாரம்பரிய தினத்தின் நோக்கமாக உள்ளது.

நம்மிடம் இருக்கும் பாரம்பரியத்தின் மூலம் வரலாற்றுடன் இணைகிறோம். உலக பாரம்பரிய தினம், நினைவுச்சின்னங்கள் மற்றும் தளங்களுக்கான சர்வதேச தினம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் உலக பாரம்பரிய தினம் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக பாரம்பரிய நாள் வரலாறு

கடந்த 1982ஆம் ஆண்டில் ICOMOS எனப்படும் நினைவுச்சின்னங்கள் மற்றும் தளங்களுக்கான சர்வதேச கவுன்சில் ஆண்டுதோறும் ஏப்ரல் 18ஆம் தேதி உலக பாரம்பரிய தினத்தை அனுசரிக்கும் யோசனையை முன்மொழிந்தது. இதற்கு அடுத்த ஆண்டில், யுனெஸ்கோவின் பொது மாநாட்டில் இந்த முன்மொழிவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. அன்றிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18, உலக பாரம்பரிய நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இயற்கை பேரழிவுகள், நகரமயமாக்கலுக்கு, மனித நடவடிக்கைகள் போன்றவற்றால் பாரம்பரிய நினைவுச்சின்னங்கள் மற்றும் தளங்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. அவற்றைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் இந்த நாளில் நிலைநிறுத்தப்படுகிறது.

முக்கியத்துவம்

இந்த ஆண்டு உலக பாரம்பரிய தினத்தின் கருப்பொருளாக "பன்முகத்தன்மையைக் கண்டறிந்து அனுபவியுங்கள்" என்பது உள்ளது.

இயற்கை நிலப்பரப்புகள், வரலாற்று நினைவுச்சின்னங்கள், கலாச்சார நடைமுறைகள், மரபுகள், சடங்குகள் மற்றும் பண்டைய இடிபாடுகள் உலக பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக உள்ளது. அவற்றை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது மிக முக்கியம். கலாச்சார மதிப்புக்காக அறியப்பட்ட அந்த இடங்கள், யுனெஸ்கோவால் உலகளாவிய அளவில் முக்கியத்துவம் பெற்றும் அங்கீகரிக்கப்படுகின்றன.

இந்த பாரம்பரிய தளங்கள் உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்த உதவும் சுற்றுலா அம்சங்களாகவும் உள்ளன. நமது செழுமையான வரலாற்றையும், நாம் முன்பு அறிந்திராத கடந்த காலத்தையும் கண்ணோட்டமாக பார்க்க உதவுகின்றன. இதனை வருங்கால சந்ததியினருக்குப் அனுபவிக்க அவற்றை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது முக்கிய கடமையாகும்.

உலக பாரம்பரிய நாளில் இந்தியாவில் நீங்கள் செல்ல வேண்டிய இடங்கள்

ஷாஜஹானின் தாஜ்மஹால் அல்லது மும்தாஜின் தாஜ் மஹால், உலக அதிசியங்களுள் ஒன்று நீங்கள் மிஸ் பண்ணக்கூடாத இடம். ஆக்ராவில் இருக்கும் இந்த இடம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடமாக உள்ளது

மத்திய பிரதேசத்தில் உள்ள கஜீராஹோ சிற்பங்கள், கோயில்கள், மஹாராஷ்ட்ராவில் உள்ள அஜந்தா - எல்லோரா குகை ஓவியங்கள், உலகின் உயரமான புராதான கட்டுமானங்களில் ஒன்றான குதுப்மினார், கர்நாடகாவில் உள்ள ஹம்பி நினைவுச்சின்னங்கள், ஒடிசாவின் கோனார்க்கில் உள்ள சூரியன் கோயில் போன்றவை முக்கிய இடங்களாக உள்ளது.

இதேபோல் தஞ்சை பெரிய கோயில், மாமல்லபுரம் கடற்கரை கோயில், மேற்கு தொடர்சி மலை பகுதிகள், ஊட்டி மலை ரயில், கோவா தேவாலயம் போன்ற இடங்கள் என இதுவரை இந்தியாவில் இருக்கும் 40 இடங்களை உலக பாரம்பரிய தலங்களாக யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.