Rahul Gandhi as LoP: 'ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர் ஆக வேண்டும்!’ காங்கிரஸ் ஒருமனதாக தீர்மானம்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Rahul Gandhi As Lop: 'ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர் ஆக வேண்டும்!’ காங்கிரஸ் ஒருமனதாக தீர்மானம்!

Rahul Gandhi as LoP: 'ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர் ஆக வேண்டும்!’ காங்கிரஸ் ஒருமனதாக தீர்மானம்!

Kathiravan V HT Tamil
Jun 08, 2024 03:54 PM IST

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக அக்கட்சி எம்பி ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும் என்று காங்கிரஸ் காரியக் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Rahul Gandhi as LoP: 'ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர் ஆக வேண்டும்!’ காங்கிரஸ் ஒருமனதாக தீர்மானம்!
Rahul Gandhi as LoP: 'ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர் ஆக வேண்டும்!’ காங்கிரஸ் ஒருமனதாக தீர்மானம்! (REUTERS)

மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் கேரளாவின் வயநாடு தொகுதிகளில் ராகுல் காந்தி வெற்றி பெற்று உள்ளார். 

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் 

இன்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மணீஷ் திவாரி, டிகே சிவகுமார், ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் காங்கிரஸ் எம்பி குமாரி செல்ஜா கூறுகையில், ”மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது காங்கிரஸ் காரிய கமிட்டியின் விருப்பம்” என்று கூறினார். 

எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்க ஒருமனதாக கோரிக்கை 

காங்கிரஸ் மூத்த தலைவரும், ஆலப்புழாவில் இருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால் கூறுகையில், “லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்குமாறு ராகுல் காந்தியிடம் காங்கிரஸ் காரிய கமிட்டி ஒருமனதாகக் கேட்டுக் கொண்டது” என்றார்.

பாரத் ஜோடா யாத்திரைக்கு பாராட்டு 

இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத்தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தியின் முயற்சிகளை காங்கிரஸ் காரிய கமிட்டி பாராட்டி உள்ளது."காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியால் வழிநடத்தப்பட்ட பாரத் ஜோடோ யாத்ரா மற்றும் பாரத் ஜோடோ நியாய யாத்ரை அவரது சிந்தனை மற்றும் ஆளுமையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்து உள்ளன. 

இந்த இரண்டு யாத்திரைகளும் நமது தேச அரசியலில் வரலாற்று திருப்புமுனைகள் மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. நமது லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் கோடிக்கணக்கான நமது வாக்காளர்கள் மீதான நம்பிக்கை ராகுல் காந்தியின் தேர்தல் பிரச்சாரம் ஒற்றை எண்ணம் கொண்டதாகவும், கூர்மையாகவும், சுட்டியாகவும் இருந்தது. 

தேர்தல் பிரச்சாரத்தில் மிகவும் சக்திவாய்ந்ததாக எதிரொலித்த ஐந்து உத்தரவாதத் திட்டம், ராகுல்ஜியின் யாத்திரையின் விளைவாகும், அதில் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், தலித்துகள், ஆதிவாசிகள், ஓபிசிகள். மற்றும் சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து மக்களின் அச்சங்கள், கவலைகள் மற்றும் அபிலாஷைகளைக் கேட்டறிந்தார் என பாராட்டப்பட்டது.  முன்னதாக, ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

140 கோடி மக்களின் எதிர்பார்பு - ரேவந்த் ரெட்டி 

இது குறித்து பேசிய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, 140 கோடி இந்தியர்களின் கோரிக்கை இது என கூறினார். "எங்கள் கோரிக்கையும் 140 கோடி இந்தியர்களின் கோரிக்கையும் ஒன்றுதான். ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்க வேண்டும். பெண்கள் மற்றும் வேலையில்லாதவர்களுக்காக ராகுல் காந்தி போராடி வருகிறார்" என்று அவர் கூறினார்.

லோக்சபா தேர்தலில் குர்தாஸ்பூரில் இருந்து வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்பி சுக்ஜிந்தர் சிங் ரந்தவா, ராகுல் காந்தி, பிரதமருக்கு நாடாளுமன்றத்தில் பதில் அளிக்கக்கூடியவர், எனவே அவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என்று கூறினார்.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, காங்கிரஸ் தேர்தலில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது மற்றும் 2019 மக்களவைத் தேர்தலில் 52 ஆக இருந்த அதன் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தி உள்ளது. 

Whats_app_banner
தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.