தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Covid - 19 : கோவிட் தொற்றால் குழந்தைகளின் மூளை பாதிப்பு – ஆய்வில் அதிர்ச்சி

Covid - 19 : கோவிட் தொற்றால் குழந்தைகளின் மூளை பாதிப்பு – ஆய்வில் அதிர்ச்சி

Priyadarshini R HT Tamil
Apr 09, 2023 12:57 PM IST

Corona Virus : கருப்பை வழியாக கோவிட் தொற்று ஏற்பட்டதால் இரண்டு குழந்தைகளின் மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இரு குழந்தைகளுக்கும் பிறந்தபோது கோவிட் தொற்று ஏற்படவில்லை. ஆனால், அவர்களின் ரத்தத்தில் வைரஸ்க்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவாகியிருந்தது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

அஹாஃப் ஆராய்ச்சியாளர்கள், கோவிட் – 19 தொற்று தொப்புள் கொடியில் இருந்து கருவில் உள்ள குழந்தைக்கும் தொற்றி பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கண்டுபிடித்துள்ளனர். மியாமி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியில், அண்மையில் ஒரு முடிவு உறுதிசெய்யப்பட்டது. இளம் தாய்மார்களுக்கு பிறந்த இரண்டு குழந்தைகள் வலிப்பு நோயால் அவதிப்பட்டனர். அவர்கள் பிறந்தபோது அவர்களின் தாய்மார்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டிருந்தது. அவர்கள் டெல்டா 2020 என்ற வகையால் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்த குழந்தைகளின் வளர்ச்சியிலும் குறிப்பிடத்தக்க தாமதம் ஏற்பட்டிருந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஒரு குழந்தை 13 மாதத்தில் இறந்துவிட்டது என்றும், மற்றொரு குழந்தை நல்வாழ்வு பராமரிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டது.  

இரு குழந்தைகளுக்கும் பிறந்தபோது கோவிட் தொற்று ஏற்படவில்லை. ஆனால், அவர்களின் ரத்தத்தில் வைரஸ்க்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவாகியிருந்தது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் தாயிடம் இருந்து குழந்தைக்கு நஞ்சுக்கொடி வழியாக சென்றிருக்கலாம் என பல்கலைக்கழகத்தின் பச்சிளங் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர் டாக்டர்.மெர்லின் பென்னி தெரிவித்தார். இரண்டு தாய்மார்களின் நஞ்சுக்கொடியிலும் வைரஸ் இருந்ததற்கான ஆதாரங்கள் இருந்தன. 

இறந்த குழந்தைக்கு செய்யப்பட்ட பிரேத பரிசோதனையிலும், கொரோனா வைரஸின் தடயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. டாக்டர் பென்னியைப் பொறுத்தவரை வைரஸ் இருப்பது, மூளை பாதிப்பை நேரடியாக ஏற்படுத்தும் என்கிறார். 

கெரோனா தொற்று ஏற்பட்டவுடன், ஒரு தாய்க்கு மிதமான நோய் அறிகுறிகள் மட்டுமே தோன்றியது. எனவே குழந்தையை முழுமையாக சுமந்தார். ஆனால் இன்னொரு தாய் கடுமையாக பாதிக்கப்பட்டதால் 8 வாரங்கள் முன்னதாகவே குழந்தையை பெற வற்புறுத்தப்பட்டார் என்று ஆய்வு கூறுகிறது. 

கொரோனா வைரசின் டெல்டா வகைக்கு மட்டும் இந்த தனித்தன்மை உள்ளதா என்பது ஆய்வு செய்யப்படவில்லை. இதேபோன்றதொரு நிலை ஒமிக்ரான் வகைக்கும் ஏற்படுமா என்பது தெரியவில்லை. 

அந்தப்பல்கலைக்கழகத்தில் உள்ள மகப்பேறு மருத்துவர் ஷானாஸ் துவாரா கூறுகையில், இதுபோன்று நிகழ்வது அரிதுதான். எனினும் கர்ப்பகாலத்தில் பல்வேறு நோய் தொற்றுகளுக்கும் ஆளான பெண்கள், தங்கள் குழந்தைகளின் வளர்ச்சியில் தாமதம் ஏற்பட்டால் மருத்துவர்களிடம் தெரிவிக்க வேண்டும் கூறினார். 

கர்ப்பிணி தாய்மார்களிடம் இருந்து கருவில் உள்ள குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். ஆனால் அதற்கு இதுவரை ஆதாரங்கள் இல்லை. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்