தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Karnataka Cm: முதல்வர் பதவி யாருக்கு? - எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பரபரப்பு தீர்மானம்

Karnataka CM: முதல்வர் பதவி யாருக்கு? - எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பரபரப்பு தீர்மானம்

Karthikeyan S HT Tamil
May 15, 2023 12:55 PM IST

Karnataka CM Race: கர்நாடகாவில் முதல்வர் பதவியை பிடிப்பதில் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

 சித்தராமையா, டிகே சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள்.
சித்தராமையா, டிகே சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள்.

ட்ரெண்டிங் செய்திகள்

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று அரியணையில் அமர உள்ளது துவண்டிருந்த காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்வு ஊட்டும் விதமாக அமைந்துள்ளது. இந்த வெற்றியை கர்நாடகா மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றிக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் ஆகியோரின் கடுமையான உழைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை வளர்த்து வெற்றியின் பாதைக்கு அழைத்துச் சென்ற பெருமை இவர்கள் இருவருக்கும் உண்டு. இதனால் முதல்வர் பதவியை பிடிப்பதில் சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே கடும் போட்டி நடக்கிறது.

இதனிடையே, கர்நாடகவின் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வழங்கி வழங்கி ஏம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது. அதேவேளையில் கர்நாடகாவின் பெரும்பான்மை சமூகமான லிங்காயத்தை சேர்ந்த ஒருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கிடையில்,

முன்னதாக, டி.கே.சிவக்குமார் தான் சார்ந்துள்ள சமூகமான ஒக்கலிக மடாதிபதிகள் உதவியை நாடியுள்ளார். இதன்படி பெங்களூருவில் உள்ள ஆதிசுஞ்சனகிரி மடத்தில் நடந்த ஒக்கலிக சங்க நிர்வாகிகள் கூட்டத்தில், சிவக்குமார் தான் முதல்வராக வேண்டும். அவருக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

மற்றொரு புறம் குருபர்கள் சங்கத்தினர் ஆலோசனை நடத்தி சித்தராமையாவுக்கு தான் முதல்வர் பதவியை தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இதனால் கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? என்ற பரபரப்பு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் நிலவி வருகிறது.

முன்னதாக, கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் -135, பாஜக - 66, மஜத -19, மற்றவர்கள் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்