தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Arunachal Pradesh: ’அருணாச்சல பிரதேசம் எங்களுக்கு சொந்தம்!’ 30 புதிய பெயர்களை வெளியிட்ட சீனாவால் பதற்றம்!

Arunachal Pradesh: ’அருணாச்சல பிரதேசம் எங்களுக்கு சொந்தம்!’ 30 புதிய பெயர்களை வெளியிட்ட சீனாவால் பதற்றம்!

Kathiravan V HT Tamil
Apr 01, 2024 05:27 PM IST

’அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கான சீன மொழி பெயர்களை சீனா வெளியிட்டுள்ளது’

அருணாச்சல பிரதேசம்
அருணாச்சல பிரதேசம் (Pinterest)

ட்ரெண்டிங் செய்திகள்

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களின் பெயர்களை சீனா மறுத்து வருகிறது, அந்த மாநிலம் தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா கூறி வருகிறது. 

சீன குடிமை விவகார அமைச்சகம், தெற்கு திபெத்தின் ஒரு பகுதியாக பெய்ஜிங் கூறும் அருணாச்சலப் பிரதேசத்திற்கான சீனப் பெயரான ஜங்னானில் தரப்படுத்தப்பட்ட புவியியல் பெயர்களின் நான்காவது பட்டியலை வெளியிட்டு உள்ளதாக சீன அரசின் அதிகாரப்பூர்வ நாளிதழான குளோபல் டைம்ஸ்  தெரிவித்துள்ளார். 

சீன அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் பிராந்தியத்திற்கு 30 கூடுதல் பெயர்களை வெளியிட்டதுடன், மே 1 முதல் நடைமுறைக்கு வரும், அமலாக்க நடவடிக்கைகள் பிரிவு 13 இல் "சீனாவின் பிராந்திய உரிமைகோரல்கள் மற்றும் இறையாண்மை உரிமைகளுக்கு தீங்கு விளைவிக்கும் வெளிநாட்டு மொழிகளில் உள்ள பெயர்கள் நேரடியாக மேற்கோள் காட்டப்படவோ அல்லது அங்கீகாரம் இல்லாமல் மொழிபெயர்க்கவோ கூடாது" என்று அந்த அறிக்கை கூறுகிறது. 

சீனக் குடிமை விவகார அமைச்சகம் கடந்த 2017 ஆம் ஆண்டில் ஜாங்னானில் உள்ள ஆறு இடங்களின் தரப்படுத்தப்பட்ட பெயர்களின் முதல் பட்டியலை வெளியிட்டது, அதே நேரத்தில் 15 இடங்களின் இரண்டாவது பட்டியல் கடந்த 2021ஆம் ஆண்டில் வெளியிட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு 11 இடங்களுக்கான பெயர்களுடன் மூன்றாவது பட்டியலையும் சீனா வெளியிட்டது. 

அருணாச்சலப் பிரதேசத்தில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட சேலா சுரங்கப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிராக பெய்ஜிங் இந்தியாவுடன் இராஜதந்திர எதிர்ப்பைத் தெரிவித்து இருந்தது. 

இந்த சுரங்கப்பாதை மூலோபாய ரீதியாக அமைந்துள்ள தவாங்கிற்கு அனைத்து வானிலை தொடர்பையும் வழங்கும் மற்றும் எல்லைப் பகுதியில் துருப்புக்களின் சிறந்த நகர்வை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்கள் அப்பகுதியில் சீனாவின் உரிமை கோரல்களை முன்னிலைப்படுத்த அறிக்கைகளை வெளியிட்டன.

வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் க்டந்த மார்ச் 23 அன்று, அருணாச்சலப் பிரதேசத்தைப் பற்றிய சீனாவின் தொடர்ச்சியான கூற்றுக்களை "கேலிக்குரியது" என்றும், எல்லை மாநிலம் "இந்தியாவின் இயற்கையான பகுதி" என்றும் கூறி இருந்தார். 

"இது ஒரு புதிய பிரச்சினை அல்ல. அதாவது, சீனா உரிமை கோரியுள்ளது, அது தனது உரிமை கோரலை விரிவுபடுத்தி உள்ளது. சீனாவின் கூற்றுகள் நகைப்புக்கு உரியது என்றும் அருணாச்சலப் பிரதேச பிரச்சினை குறித்த கேள்விக்கு ஜெய்சங்கர் பதிலளித்தார்.

அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியப் பகுதியின் ஒரு பகுதியாக அங்கீகரித்து அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை குறித்து சீனா கோபம் அடைந்தது. 

வெளியுறவுத் துறை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் மார்ச் 9 அன்று, "அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியப் பிரதேசமாக அமெரிக்கா அங்கீகரிக்கிறது, மேலும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ஊடுருவல் அல்லது அத்துமீறல்கள், இராணுவம் அல்லது பொதுமக்கள் மூலம் பிராந்திய உரிமைகோரல்களை முன்னெடுப்பதற்கான எந்தவொரு ஒருதலைப்பட்ச முயற்சியையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்."

சீன வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்கள் இரண்டும் அமெரிக்க அறிக்கையை விமர்சித்தது, சீனா-இந்தியா எல்லைப் பிரச்சினை இரு நாடுகளுக்கு இடையிலான விஷயம் என்றும் வாஷிங்டனுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறியது.

IPL_Entry_Point