தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Lgbtqia+ சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்-குழு அமைக்க மத்திய அரசு முடிவு

LGBTQIA+ சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்-குழு அமைக்க மத்திய அரசு முடிவு

Manigandan K T HT Tamil
May 03, 2023 12:29 PM IST

Supreme Court of India: இந்த விஷயத்தை மத்திய அரசு நேர்மறையான முடிவை எடுத்துள்ளது என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கோர்ட்டில் தெரிவித்தார்.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

ட்ரெண்டிங் செய்திகள்

LGBTQIA+ சமூகத்தினர் தாக்கல் செய்ய இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. தன்பாலின ஈர்ப்பாளர்கள் தொடர்புடைய வழக்கு இன்று (மே 3) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது LGBTQIA+ சமூகத்தினரின் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள கேபினட் செயலர் தலைமையில் குழு அமைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டது.

இந்த விஷயத்தை மத்திய அரசு நேர்மறையான முடிவை எடுத்துள்ளது என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கோர்ட்டில் தெரிவித்தார்.

'எனது நண்பர்கள் (மனுதாரர்கள்) அவர்களின் பிரச்சனைகளை மத்திய அரசின் குழுவிடம் தெரிவிக்கலாம். அந்தப் பிரச்சனைகளை களைவதற்கான சட்டரீதியிலான அனைத்து முயற்சிகளையும் அந்தக் குழு ஆராயும்' என்றார் துஷார் மேத்தா.

LGBTQIA+ சமூகத்தினரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.எம்.சிங்வி, நிர்வாக மாற்றங்களை மட்டுமே செய்ய வேண்டும் என்று அரசு உறுதியளித்துள்ளதால் விசாரணைகள் தொடர வேண்டும் என்று வாதம் முன்வைத்தார்.

அதற்கு பதிலளித்த துஷார் மேத்தா, "சட்டம் அனுமதிக்கும் அனைத்து மாற்றங்களை அரசு செய்ய தயார்" என்றார்.

ஆதரவு நாடுகள்

அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, சிலி, கொலம்பியா உள்ளிட்ட நாடுகள் தன்பாலினத்தவர்கள் திருமணத்துக்கு அங்கீகாரம் அளித்துள்ளன.

முன்னதாக, தனிநபர் சட்டங்கள் மற்றும் சமூக விழுமியங்களை மேற்கோள் காட்டி தன் பாலினத்தவர் திருமணத்தை அங்கீகரிப்பதற்கு இந்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் எதிர்ப்பு தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

ஒரு குறிப்பிட்ட சமூக உறவுமுறையை அங்கீகரிப்பதில் அடிப்படை உரிமை இருக்க முடியாது என்பதையும் மத்திய அரசு அடிக்கோடிட்டுக் சுட்டிக் காட்டியது.

தன் பாலின திருமணத்தை சட்டப்படி அங்கீகரிக்கக் கோரி அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்களுக்கு மத்திய அரசு இவ்வாறு எதிர்ப்புத் தெரிவித்து இருந்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews 

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்