தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Equipped Cab: வாடிக்கையாளர்களுக்குத் தேவையான பொருட்களுடன் வலம் வரும் டாக்ஸி - இது எங்க தெரியுமா?

Equipped Cab: வாடிக்கையாளர்களுக்குத் தேவையான பொருட்களுடன் வலம் வரும் டாக்ஸி - இது எங்க தெரியுமா?

Marimuthu M HT Tamil
Nov 17, 2023 12:14 PM IST

ஹேர் பேண்டுகள், சாக்லேட்கள், தண்ணீர், ஃப்ரூட்டி, நாப்கின்கள் மற்றும் பலவற்றைக் கொண்ட வண்டியின் வீடியோவைப் பெண் ஒருவர் பகிர்ந்துள்ளார். இந்த கிளிப் 11 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாகியுள்ளது.

வாடிக்கையாளர்களுக்குத் தேவையான பொருட்களுடன் வலம் வரும் டாக்ஸி - இது எங்க தெரியுமா?
வாடிக்கையாளர்களுக்குத் தேவையான பொருட்களுடன் வலம் வரும் டாக்ஸி - இது எங்க தெரியுமா? (Instagram/@radha__pundir)

ட்ரெண்டிங் செய்திகள்

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பயனர் ராதா விரிவான தலைப்புடன் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், "நொய்டாவில் ஒரு வண்டியை முன்பதிவு செய்தேன். அத்தகைய காரினை கண்டுபிடித்ததில் நான் உண்மையில் ஈர்க்கப்பட்டேன். முதலில் அந்த காரின் உரிமையாளருக்குப் பாராட்டுக்கள். அந்த காரில் ஹேர் பேண்டுகள், மிட்டாய்கள், தண்ணீர் பாட்டில்கள், ஃப்ரூட்டி, நாப்கின்கள் மற்றும் குடை உட்பட, பயணத்தின் போது தேவைப்படும் ஒவ்வொரு பொருட்களையும் வைத்திருக்கிறார். புதிய அனுபவம்,” என்று அவர் எழுதியுள்ளார். 

மேலும் ஓட்டுநரின் பக்கத்தின் பின்புறத்தில், ஒரு தொங்கும் அலமாரி போன்று செட் செய்து, அதில் இத்தகைய பொருட்கள் நிரப்பப்பட்டிருக்கிறது. 

அந்த காரின் நம்ப முடியாத வீடியோவைப் பாருங்கள்:

இந்த வீடியோ கடந்த மாதம் பகிரப்பட்டது. அப்போதிருந்து, இது 11.8 மில்லியன் பார்வைகளைக் குவித்துள்ளது. மேலும் எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருகிறது. இந்த பதிவு மக்களிடம் இருந்து மாறுபட்ட கருத்துகளையும் பெற்றுள்ளது. சிலர் ஓட்டுநரைப் பாராட்டினாலும், சிலர் இந்த குறிப்பிட்ட வண்டியில் பயணம் செய்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

இதுகுறித்து Instagram பயனர்கள் வெளியிட்ட கருத்துகள்:

“நான் அதே வண்டியில் பயணித்தேன். ஒருநாள் இத்தகைய வண்டியில் செல்ல முடிவு செய்ததில் மிகவும் மகிழ்ச்சி. பின் அவரது டைரியில் ஒரு முழுப் பக்கம் அளவுக்கு நன்றி தெரிவித்து எழுதிவைத்தேன்” என்று இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொருவர், ”இத்தகைய கார் ஓட்டுநரினை பிரபலமாக்குங்கள். அவர் அதற்கு தகுதியானவர்" என்று கூறினார். இன்னொருவர் "இவர் உண்மையில் தனது வேலையை அனுபவித்துசெய்கிறார்’’ என்றார்.

“இதெல்லாம் இலவசமா அல்லது கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமா’’ என நான்காம் நபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு காரில் பயணித்த ராதா, அனைத்தும் இலவசம் என்று பதிலளித்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point