தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Opposition Meet: ’எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் மும்பையில்’! பாஜக ஆளும் மாநிலத்தில் பக்கா ஸ்கெட்ச்

Opposition Meet: ’எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் மும்பையில்’! பாஜக ஆளும் மாநிலத்தில் பக்கா ஸ்கெட்ச்

Kathiravan V HT Tamil
Jul 18, 2023 03:56 PM IST

”மூன்றாவது கூட்டத்தை பாஜக ஆளும் மகாராஷ்டிராவில் நடத்த முடிவு செய்துள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது”

பாட்னா, பெங்களூருவை தொடர்ந்து முன்றாவது கூட்டம் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடத்தப்படுகிறது
பாட்னா, பெங்களூருவை தொடர்ந்து முன்றாவது கூட்டம் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடத்தப்படுகிறது

ட்ரெண்டிங் செய்திகள்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி வருகின்றன. கடந்த ஜூன் 23ஆம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் முதல் கூட்டம் நடைபெற்ற நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரண்டாவது கூட்டம் நேற்று தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, ஐயூஎம்எல், கொமதேக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் தளம், ஆம் ஆத்மி, தேசிய மாநாட்டு கட்சி, தேசியவாத காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட 26 கட்சிகள் பங்கேற்றுள்ளன.

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா (I.N.D.I.A - INDIAN NATIONAL DEMOCRATIC INCLUSIVE ALLIANCE) என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்த கூட்டத்தை மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடத்த இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

முதல் கூட்டம் ஐக்கிய ஜனதாதளம் ஆளும் பீகாரிலும் இரண்டாவது கூட்டம் காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவிலும் நடைபெற்ற நிலையில் மூன்றாவது கூட்டத்தை பாஜக ஆளும் மகாராஷ்டிராவில் நடத்த முடிவு செய்துள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்