தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  All You Need To Know About Lexi, India's First Chatgpt-powered Ai Assistant

ChatGPTயும் வேணாம், கூகுளின் Bardம் வேணாம்! வருகிறது இந்தியாவின் Lexi AI

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 15, 2023 11:58 AM IST

India 1st AI: ChatGPT செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தொடர்ந்து கூகுளின் Bard, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கொர்டானா என பிரபல நிறுவனங்கள் வரிசை கட்டி AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் இந்த வேளையில் இந்திய நிறுவனமான Lexiயும் களமிறங்குகிறது.

இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு Lexi அறிமுகம்
இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு Lexi அறிமுகம்

ட்ரெண்டிங் செய்திகள்

இதற்கு முக்கிய காரணமாக கடந்த ஆண்டு நவம்பரில் சத்தமில்லாமல் அறிமுகம் செய்யப்பட்ட OpenAI நிறுவனத்தின் ChatGPT AI, பொதுமக்களிடம் பெற்ற வரவேற்பு முக்கிய காரணமாக அமைந்தது. இதன் வருகையை மக்களுக்கான சிறந்த வரப்பிரசாதம் என்ற பல் தொழில்நுட்ப வல்லுநர்களும் தெரிவித்தனர்.

அதற்கு ஏற்றார்போல், இந்த ChatGPT AIஐ பயன்படுத்தியவர்களும் பல்வேறு வித்தியாசமான தேடுதல்களையும், கேள்விக்கனைகளையும் தொடுக்க அதற்கு வந்த பதில்களும், தகவல்களும் ஆச்சயர்த்தை வரவழைப்பதாக இருந்ததோடு, எதிர்காலம் இந்த அற்புத தொழில்நுட்பத்தை நோக்கியே அமைந்திருக்கும் என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது.

அந்த வகையில், ChatGPTக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் Bard என்ற பெயரிலும், மைக்ரோசாப்ட் நிறுவனம் Cortana என்ற பெயரில் விரைவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த போட்டியில் தற்போது இந்திய நிறுவனம் ஒன்று இணைந்துள்ளது. வெலாசிட்டி என்ற உள்நாட்டு நிதி சார்ந்த தொழில்நுட்ப நிறுவனம் Lexi என்ற பெயரில் AI ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. இது இந்தியாவின் முதல் AI சாட்பாட்டாகவும், ChatGPTயுடன் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெலாசிட்டி நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் இணை நிறுவனர் அபிரூப் மேதேகர் கூறியதாவது: "ஈ-காமர்ஸ் நிறுவனர்களுக்கு கடன் நிதி (அந்நிய செலாவணியை) வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம். ChatGPT தொடங்கப்பட்டதில் இருந்து, அவர்களுக்கு பயனளிக்கும் வகையில் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்து எங்கள் தயாரிப்பு குழுக்கள் பணிகள் செய்து வருகின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த Lexi AI குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்:

வெலாசிட்டி நிறுவனம் ChatGPTயுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிராண்டுகள் நம்பகமான வணிக முடிவுகளை எடுக்கிறது.

இதனை பயன்படுத்தும் பிராண்டுகளுக்கு, வாட்ஸ்அப்பில் தினசரி வணிகம் தொடர்பான அறிக்கைகள் அனுப்பப்படுகின்றன. தற்போது வாட்ஸ்அப் இடைமுகம் தான் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இந்த ஒருங்கிணைப்பு மூலம் , உரையாடல் முறையில் எந்தவொரு உராய்வும் இல்லாமல் வணிக முடிவுகளை எடுப்பதற்கு தங்களது பிராண்டுகளை அனுமதிக்கிறது.

முழுக்க பைனான்ஸ் துறை சார்ந்து இயங்கும் விதமாக இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அமைகிறது.

IPL_Entry_Point