தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Aditya-l1 Mission:விண்ணில் பாய்ந்தது ஆதித்யா எல்-1; இந்தியா புது பாய்ச்சல்

Aditya-L1 Mission:விண்ணில் பாய்ந்தது ஆதித்யா எல்-1; இந்தியா புது பாய்ச்சல்

Marimuthu M HT Tamil
Sep 02, 2023 11:55 AM IST

சூரியனை ஆய்வு செய்ய இருக்கும் ஆதித்யா எல்-1 விண்கலம் இன்று நண்பகல் 11:50 மணிக்கு சரியாக விண்ணில் ஏவப்பட்டது

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஆதித்யா எல்-1
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஆதித்யா எல்-1

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த ஆய்வுக்கூடமானது பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில், சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் லெக்ராஞ்சியன் பாயிண்ட் 1 என்ற இடத்தில் நிலைநிறுத்தப்படுகிறது. இந்த லெக்ராஞ்சியின் பாயிண்ட் என்பது சூரியனின் ஈர்ப்பு விசையும், பூமியின் ஈர்ப்பு விசையும் விலகும் புள்ளியாகும். இதற்காக இன்று ஏவப்பட்ட ஆதித்யா எல்-1 என்ற விண் ஆய்வுக்கூடமானது,125 நாட்கள் பயணித்து, அந்த லெக்ராஞ்சியன் பாயிண்டை அடைகிறது. அதேபோல், இந்த ஆய்வுக்கூடமானது, சுமார் 5 ஆண்டுகள் வரை செயலில் இருக்கும்.

இந்த ஆய்வுக்கூடமானது சூரியனின் காந்த துகள் வெளியேற்றம், சூரியனின் கரும்புள்ளிகள், வெப்பநிலை, காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவற்றை ஆய்வு செய்கிறது. சூரியனை ஆய்வு செய்ய முன்னதாக அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் முன்னரே,தங்கள் விண்கலத்தைச் செலுத்திய நிலையில், இந்தியா முதன்முறையாக, ஆதித்யா எல்-1 என்ற இந்த விண்கலம் என்கிற விண்வெளி ஆய்வுக்கூடத்தை வானில் செலுத்தியது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்