Suresh Gopi on Minister Post: ’மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேனா?’ நடிகர் சுரேஷ் கோபி புதிய விளக்கம்!
Suresh Gopi: திருச்சூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி, வழக்கறிஞரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருமான வி.எஸ்.சுனில் குமாரை 74,686 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக வெளியான செய்திகளுக்கு நடிகரும், மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி மறுப்பு தெரிவித்து உள்ளார்.
கேரளாவில் பாஜகவின் கணக்கை தொடங்கிய சுரேஷ் கோபி
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவில் உள்ள திருச்சூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி, வழக்கறிஞரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருமான வி.எஸ்.சுனில் குமாரை 74,686 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் கேரள மாநில அரசியல் வரலாற்றில் பாஜக தனது எம்.பி கணக்கை தொடங்கி உள்ளது.
புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவை நேற்று பொறுப்பேற்றது. 30 கேபினட் அமைச்சர்கள், 36 இணை அமைச்சர்கள், 5 இணை அமைச்சர்கள், 5 தனிப்பொறுப்பு உடன் கூடிய இணை அமைச்சர் பதவிகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.