தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  இரக்கமே இல்லையா போலீஸ்கார்? பூட்ஸ் காலில் மிதித்ததால் சிசுவின் கதிய பாருங்க!

இரக்கமே இல்லையா போலீஸ்கார்? பூட்ஸ் காலில் மிதித்ததால் சிசுவின் கதிய பாருங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 24, 2023 08:25 AM IST

Jharkhand: குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் 2 அதிகாரிகள் உள்ளிட்ட 6 போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிசு பலி
சிசு பலி

ட்ரெண்டிங் செய்திகள்

ஜார்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள கிரிதி மாவட்டத்தில் உள்ள கோஷோதிங்கி கிராமத்தில் வசித்து வருபவர் பூஷன் பாண்டே. இவர் மீதான வழக்கு ஒன்றில் இவருக்கு எதிரான கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் பிடிவாரண்டை பூஷன் பாண்டேவிடம் கொடுக்க 6 போலீசார் அவரது வீட்டிற்கு நேரில் சென்றிருந்தனர். அப்போது பூஷன் பாண்டே வீட்டில் பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை இருந்தது. பூஷண் பாண்டே வீட்டில் அதிரடி சோதனை என்ற பெயரில் காவல்துறையினர் அராஜகம் செய்தனர். இதில் பச்சிளம் குழந்தை காவல்துறையினரின் பூட்ஸ் காலில் மிதி பட்டு உயிரிழந்தது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தையின் உடல் நேற்று பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையின் முடிவில் குழந்தையின் உடல் உறுப்புகள் பூட்சால் நசுங்கியதில் உயிரிழந்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் 2 அதிகாரிகள் உள்ளிட்ட 6 போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதில் சம்பந்தப்பட்ட 5 காவலர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் இந்த கொடூர சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் உத்தரவிட்டுள்ளர்.

இதுபோன்ற அத்துமீறலில்  போலீசாரே ஈடுபட்டுள்ள தங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை மனசாட்சி இல்லாமல் பூட்ஸ் காலால் மிதித்து கொலை செய்துள்ள காவலர்களுக்கு உட்ச பட்ச தண்டனை பெற்று தர வேண்டும் என்று அப்பகுதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்