தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Viral: 6 மனைவிகள், 16 குழந்தைகள்..16 வயது அழகியை 7-வது திருமணம் செய்து கொண்ட 65 வயது மேயர்!

Viral: 6 மனைவிகள், 16 குழந்தைகள்..16 வயது அழகியை 7-வது திருமணம் செய்து கொண்ட 65 வயது மேயர்!

Karthikeyan S HT Tamil
Apr 28, 2023 01:19 PM IST

Viral Wedding: 6 திருமணங்கள் மூலம் 16 குழந்தைகள் இருக்கும் நிலையில், பிரேசிலில் மேயர் ஒருவர் 7-வது முறையாக 16 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது.

பிரேசில் அரவுகாரியா (Araucaria)  நகராட்சியின் மேயர் ஹிசாம் ஹூசைன் தெஹைனி.
பிரேசில் அரவுகாரியா (Araucaria) நகராட்சியின் மேயர் ஹிசாம் ஹூசைன் தெஹைனி. (GMC)

ட்ரெண்டிங் செய்திகள்

மேயர் ஹிசாம் ஹூசைன் தெஹைனி திருமணம் செய்து கொண்டுள்ள காவான் ரோட் காமர்கோ பள்ளி மாணவி ஆவார். கடந்த ஆண்டு நடைபெற்ற மிஸ் அரவுகாரியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றிருந்தார். 7-வது திருமணம் செய்துகொண்ட செய்திகள் வெளியான நிலையில், ஹிசாம் தனது மேயர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், குடியுரிமை கட்சியில் இருந்து விலகுவதாகவும் தெஹைனி அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் திருமணமான அடுத்தநாள் சிறுமியின் தாய் மரிலீன் ரோட் அரௌகாரியா நகராட்சியின் கலாச்சார செயலாளராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார். மரிலினின் சகோதரி எலிசாங்கலா ரோடேவும் சிட்டி ஹாலில் கமிஷனராக உள்ளார். இது தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

மேயர் ஹிசாம் ஹூசைன் திருமணத்தின் போது எடுத்த புகைப்படம்.
மேயர் ஹிசாம் ஹூசைன் திருமணத்தின் போது எடுத்த புகைப்படம்.

குறிப்பாக திருமணத்திற்குப் பிறகு இளம் மணமகளின் தாயின் பதவி உயர்வு தொடர்பாக பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும் அரௌகாரியா நகராட்சி தகவல்படி, அவருக்கு 26 ஆண்டுகள் அனுபவம் இருப்பதால் பதவி உயர்வு கிடைத்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2000ஆம் ஆண்டு, மேயர் ஹிசாம் ஹூசைன் போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, விசாரணை செய்யப்பட்டார். பின் கைது செய்யப்பட்ட அவர், கடத்தல் கும்பலுடன் எந்த தொடர்பும் இல்லாதவர் என்று அறிவிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். இந்த சூழலில் தற்போது பள்ளி சிறுமியை 7-வது திருமணம் செய்துகொண்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்