தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  2 Air Force Planes Crash In Madhya Pradesh

Aircraft crash: மத்தியபிரதேசத்தில் 2 விமானப்படை விமானங்கள் விபத்து

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 28, 2023 12:28 PM IST

இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய் 30, மற்றும் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் விபத்து

போர் விமானங்கள் விபத்து
போர் விமானங்கள் விபத்து

ட்ரெண்டிங் செய்திகள்

மத்தியபிரதேச மாநிலம் குவாலியர் விமான தளத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய் 30, மற்றும் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் பயிற்சிக்காக புறப்பட்டது. அப்போது மொரேனா பகுதியில் விமானம் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இரண்டு விமானங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விமானங்கள் விழுந்து நொறுங்கியதையடுத்து அப்பகுதியில் தீ கொழுந்து விட்டு எரிந்த வண்ணம் உள்ளது.

இதையடுத்து அப்பகுதி மக்களுடன் இணைந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விமானத்தில் பயணித்தவர்களின் நிலை என்ன? என்பது குறித்த முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாக வில்லை. இதில் ஒரு விமானத்தில் 2 விமானிகள் இருந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

மிராஜ், சுகோய் ரக விமானங்கள் பழைய விமானங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விபத்துக்குள்ளாகி உள்ள மிராஜ் ரக விமானங்கள் தான் இந்தியா பாகிஸ்தானிலிருந்த தீவிரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி விட்டு பிறகு பத்திரமாக இந்தியாவிற்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்துக்கான காரணங்கள் குறித்த ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

அதேபோல் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் இருந்து சென்ற இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜெட் ரக விமானம் விபத்துக்குள்ளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்