தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Pakistan: விஸ்வரூபம் பட பாணியில் தொழுகையின் போது எஸ்கேப் ஆன 13 சிறை கைதிகள் - பரபரப்பான சம்பவம்

Pakistan: விஸ்வரூபம் பட பாணியில் தொழுகையின் போது எஸ்கேப் ஆன 13 சிறை கைதிகள் - பரபரப்பான சம்பவம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 04, 2023 01:44 PM IST

ஈத் பண்டிகையின்போது தொழுகை நேரத்தில் 13 கைதிகள் பாகிஸ்தான் சிறையிலிருந்து தப்பியோடியுள்ளார். சிறை அலுவலர்கள் இருவரின் துப்பாக்கிகளை பறித்து மோதலை ஏற்படுத்தி கைதிகள் தப்பி சென்றுள்ளனர்.

பாகிஸ்தானில் இருந்து 13 சிறை கைதிகள் தப்பியோட்டம்
பாகிஸ்தானில் இருந்து 13 சிறை கைதிகள் தப்பியோட்டம்

ட்ரெண்டிங் செய்திகள்

ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிய அருகே அமைந்திருக்கும் பாலேசிஸ்தானில் உள்ள சமன் மாவட்ட சிறையில் ஈத் பண்டிகையை முன்னிட்டு காலை நேரத்தில் தொழுகை செய்வதர்காக விசாரணை கைதிகள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதில் 17 பேர் சிறை பாதுகாவலர்களுக்கு எதிராக திடீரென திரும்பினர்.

அப்போது பணியில் இருந்த இரண்டு காவலர்களின் துப்பாக்கியை பறித்து மோதலில் ஈடுபட்டனர். இதன் விளைவாக சிறைகாவலர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சிறைவாசி ஒருவர் உயிரிழந்தார். இரண்டு பேர் காயமடைந்த நிலையில், ஒருவர் சிறைகாவலர்களிடம் சரணடைந்தார். மீதமுள்ள 13 பேர் சிறையிலிருந்து தப்பி சென்றனர்.

இந்த மோதல் சம்பவத்தில் சிறைகாவலர்கள் சிலரும் காயமடைந்துள்ளனர். சிறையிலிருந்து தப்ப சென்ற கைதிகள் கொலை, கொள்ளை, போதை பொருள் கடத்தல் போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகின்றனர். விரைவில் இவர்களுக்கு தண்டனை வழங்கப்பட இருந்த நிலையில் சிறையில் இருந்து தப்பியோடியுள்ளனர்.

இந்த சம்பவம் நடைபெற்ற சிறை ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் இருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. எனவே சிறையில் இருந்து தப்பித்தவர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு செல் வாய்ப்பு இருப்பதால் எல்லை பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஈத் பண்டிகையை முன்னிட்டு சிறையில் குறைவான பாதுகாவலர்களே பணியில் இருந்துள்ளனர். இதை நன்கு அறிந்த பிறகே கைதிகள் திட்டமிட்டு தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிறை அலுவலர்கள், போலீசார் உள்பட 10 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்