மழைக்கால சளியை குணப்படுத்த மிளகு குழம்பு! சூப்பரான ரெசிபி இதோ! இப்பவே ட்ரை பண்ணுங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மழைக்கால சளியை குணப்படுத்த மிளகு குழம்பு! சூப்பரான ரெசிபி இதோ! இப்பவே ட்ரை பண்ணுங்க!

மழைக்கால சளியை குணப்படுத்த மிளகு குழம்பு! சூப்பரான ரெசிபி இதோ! இப்பவே ட்ரை பண்ணுங்க!

Suguna Devi P HT Tamil
Nov 24, 2024 04:32 PM IST

மழைக்காலம் வந்து விட்டாலே குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவருக்கும் சளி தொந்தரவுகள் ஏற்படுவது உண்டு. இதில் இருந்து விடுபட சில வீட்டு வைத்தியமே போதுமானதாக இருக்கும். இந்த வீட்டு வைத்தியத்தில் பிரதானமாக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் தான் மிளகு.

மழைக்கால சளியை குணப்படுத்த மிளகு குழம்பு! சூப்பரான ரெசிபி இதோ! இப்பவே ட்ரை பண்ணுங்க!
மழைக்கால சளியை குணப்படுத்த மிளகு குழம்பு! சூப்பரான ரெசிபி இதோ! இப்பவே ட்ரை பண்ணுங்க! (Indian Recipes in tamil )

தேவையான பொருட்கள்

மசாலா விழுது அரைக்க

2 டீஸ்பூன் எண்ணெய்

2 டீஸ்பூன் மல்லித்தூள்

1 டீஸ்பூன் கடலை பருப்பு 

2 டேபிள்ஸ்பூன் பச்சரிசி 

3 டேபிள்ஸ்பூன் மிளகு 

2 பற்கள் பூண்டு

 சிறிதளவு கறிவேப்பிலை

5 வற மிளகாய் 

தேவையான அளவு தண்ணீர்

மிளகு குழம்பு செய்ய

5 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்

1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு 

1 டீஸ்பூன் கடுகு 

1 டீஸ்பூன் வெந்தயம்

1 டீஸ்பூன் சீரகம் 

கால் டீஸ்பூன் பெருங்காய தூள் 

15 முதல் 20 சின்ன வெங்காயம் 

7 முதல் 8 பெரிய பல் பூண்டு

சிறிதளவு கறிவேப்பிலை

புளி தண்ணீர்

அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் 

சிறிதளவு வெல்லம்

செய்முறை

முதலில் மிளகு குழம்பு செய்யத் தேவையா மசாலாவை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் சிறிதளவு கடலை பருப்பு, சிறிதளவு பச்சரிசி மற்றும் சிறிதளவு மிளகு ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். இவை அனைத்தும் நன்கு வறுபட்ட  பிறகு பூண்டு, கறிவேப்பிலை, வற  மிளகாய் ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். பின்பு இதனை அடுப்பில் இருந்து இறக்கி நன்கு ஆறவிட வேண்டும். நன்கு ஆறிய பின் ஒரு மிக்சியில் போட்டு முதலில் தூளாக அரைத்து, பின்னர் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது சுவையான மசாலா தயார். இதனை வைத்து மிளகு குழம்பு செய்ய ஆரம்பிக்கலாம். 

மிளகு குழம்பு செய்ய முதலில் தண்ணீரில் ஊறவைத்த புளியை நன்கு கரைத்து வைத்து கொள்ளவும். ஒரு அகலமான கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் உளுத்தம் பருப்பு, கடுகு, வெந்தயம், சீரகம் சேர்க்கவும். கடுகு பொறிய ஆரம்பித்ததும் பெருங்காய தூள், சின்ன வெங்காயம் பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு 3 நிமிடம் வதக்கவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து புளி தண்ணீரை ஊற்றி கலந்து விடவும். அடுத்து மஞ்சள் தூள், கல்லுப்பு சேர்த்து புளி தண்ணீரை நன்கு கொதிக்கவிடவும். பிறகு அரைத்த மசாலா, தண்ணீர், வெல்லம் ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்கவிடவும். ருசியான மிளகு குழம்பு ரெடி. அதிக சளி உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இதனை தாராளமாக கொடுக்கலாம். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.