மார்க்கெட்டில் பாத்திருக்கிறீர்கள்; ருசித்திருக்கிறீர்களா? மங்குஸ்தான் பழங்களின் நன்மைகள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மார்க்கெட்டில் பாத்திருக்கிறீர்கள்; ருசித்திருக்கிறீர்களா? மங்குஸ்தான் பழங்களின் நன்மைகள்!

மார்க்கெட்டில் பாத்திருக்கிறீர்கள்; ருசித்திருக்கிறீர்களா? மங்குஸ்தான் பழங்களின் நன்மைகள்!

Priyadarshini R HT Tamil
Oct 26, 2024 09:55 AM IST

மார்க்கெட்டில் பாத்திருப்பீர்கள், இந்தப்பழங்களை ருசித்திருக்கிறீர்களா? மங்குஸ்தான் பழங்களின் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

மார்க்கெட்டில் பாத்திருக்கிறீர்கள்; ருசித்திருக்கிறீர்களா? மங்குஸ்தான் பழங்களின் நன்மைகள்!
மார்க்கெட்டில் பாத்திருக்கிறீர்கள்; ருசித்திருக்கிறீர்களா? மங்குஸ்தான் பழங்களின் நன்மைகள்!

ஷான்தோன்கள் செல் சேதத்தைத் தடுக்கிறது

மங்குஸ்தானில் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. குறிப்பாக இந்த ஷான்தோன்கள், உங்கள் உடலில் ஃப்ரி ராடிக்கல்களை முறைப்படுத்த உதவுகின்றன. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடல் செல்களை பாதுகாக்கிறது. இது உங்கள் புற்றுநோய் போன்ற நாய்பட்ட நோய்கள் ஏற்படாமல் காக்கிறது.

வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்தது

மங்குஸ்தானில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் உடலில் ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை தூண்ட உதவுகிறது. ரத்த வெள்ளை அணுக்கள்தான் நோய்களையும், தொற்றுக்களையும் எதிர்த்து போராடுகின்றன. இது உங்கள் உடலை பொதுவான சளி, காய்ச்சல் மற்றும் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது.

மங்குஸ்தான் ஆஸ்துமாவை குணப்படுத்துகிறது

இதில் உள்ள ஷானதோன்கள் மற்றும் மற்ற உட்பொருட்கள் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் நிறைந்தது. இதை உங்கள் உணவில் அன்றாடம் சேர்த்துக்கொள்வது உங்களுக்கு வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது ஆஸ்துமா மற்றும் ஆர்த்ரிட்டிஸ் போன்ற பிரச்னைகளை குணப்படுத்துகிறது.

நார்ச்சத்துக்கள் நிறைந்தது

மங்குஸ்தானில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது செரிமானத்தை அதிகரித்து, குடலின் வழக்கமான இயக்கத்தை அதிகரிக்கிறது. இது மலச்சிக்கலைத் தடுக்கிறது. வயிறு உப்புசத்தை குறைக்கிறது. குடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இது நல்ல குடல் பாக்டீரியாக்களை வலுப்படுத்துகிறது.

இதய ஆரோக்கியம்

மங்குஸ்தானில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உங்கள் உடலில் கொழுப்பு அளவைக் குறைக்க உதவுகிறது. இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது தமனிகள் கடினமாவதைத் தடுக்கிறது. இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படாமல் காக்கிறது.

உடல் எடை குறைப்பு

மங்குஸ்தானை உங்கள் உடல் எடை குறைப்பில் சேர்த்துக்கொள்ளலாம். இது கலோரிகள் குறைவானது. ஆனால் நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்தது. இதை நீங்கள் உடல் எடையைக் குறைக்க உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது உங்கள் பசியைக் கட்டுப்படுத்த உதவும். இதனால் உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வு கிடைக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவை முறைப்படுத்தவும் உதவுகிறது.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட் குணங்கள் மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்கள், உடலில் ஆக்ஸிடேட்டில் சேதத்தைக் குறைக்கிறது. இது சருமத்தின் நெகிழ் தன்மையை அதிகரிக்கிறது. இது சருமத்துக்கு நல்ல நிறம் கிடைக்கவும், உங்களுக்கு இளமை தோற்றத்தையும் கொடுக்கிறது. இது உங்கள் சருமத்தை சரிசெய்ய உதவுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு பலன்

நீரிழிவு நோயாளிகள் மங்குஸ்தான் பழத்தால் பலன்பெறுகிறார்கள். இது ரத்த்தத்தில் சர்க்கரை அளவை முறைப்படுத்த உதவுகிறது. இதை உங்கள் உணவில் சேர்த்துக்கொண்டால் அது உங்களுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. இதன் நார்ச்சத்துக்கள் உடலில் சர்க்கரை உறிஞ்சப்படும் திறனைக் குறைக்கிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், இன்சுலின் சென்சிட்டிவிட்டியை அதிகரிக்கிறது.

மூளை ஆரோக்கியம்

இது மூளை ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கிறது என்று கூறப்படுகிறது. இதில் உள்ள ஷான்தோன்கள், மூளையை ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தில் இருந்து காக்கிறது. வீக்கத்தையும் தடுக்கிறது. இதனால் மனகோளாறுகள் நீங்கள், மன ஆரோக்கியம் மேம்பாடுத்தப்பட்டு, மூளை ஆரோக்கியம் காக்கப்படுகிறது. இந்தப் பழத்தை நீங்கள் வழக்கமாக உட்கொள்வதால், உங்கள் மனநிலை மாறும், பயம், பதற்றம் குறையும்.

கர்ப்ப காலத்தின் கருவின் ஆரோக்கியம்

மங்குஸ்தான் பழத்தில் ஃபோலேட் என்ற முக்கிய ஊட்டச்சத்துக்க உள்ளது. இது கருவின் வளர்ச்சிக்கு நல்லது. இந்தப் பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள், உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. கர்ப்ப காலத்தில் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்கிறது.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.