World Forestry Day 2024 : இன்று உலக வன தினம்! காடுகளை காக்க என்ன செய்யவேண்டும்? – அறிவுறுத்தும் வல்லுனர்!-world forestry day 2024 today is world forestry day what should be done to save forests instructing expert - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  World Forestry Day 2024 : இன்று உலக வன தினம்! காடுகளை காக்க என்ன செய்யவேண்டும்? – அறிவுறுத்தும் வல்லுனர்!

World Forestry Day 2024 : இன்று உலக வன தினம்! காடுகளை காக்க என்ன செய்யவேண்டும்? – அறிவுறுத்தும் வல்லுனர்!

Priyadarshini R HT Tamil
Mar 21, 2024 10:23 AM IST

World Forestry Day 2024 : இந்த நிலங்களில் நாம் மரங்களை மட்டுமே நட்டு பராமரிக்க முடியும். காடுகளை திரும்பக்கொண்டுவரமுடியாது. வனத்தில் பன்முகத்தன்மை இருக்கும். நாம் வனங்களை வளர்க்க முடியாது. மரங்களை மட்டுமே வளர்க்க முடியும்.

World Forestry Day 2024 : இன்று உலக வன தினம்! காடுகளை காக்க என்ன செய்யவேண்டும்? – அறிவுறுத்தும் வல்லுனர்!
World Forestry Day 2024 : இன்று உலக வன தினம்! காடுகளை காக்க என்ன செய்யவேண்டும்? – அறிவுறுத்தும் வல்லுனர்!

நீங்கள் எழுத பயன்படுத்தும் நோட்டு புத்தகம், கட்டும் வீடு அல்லது உங்கள் அன்றாட மருந்துகள் என காடுகள் இந்த அனைத்து நடவடிக்கைகளிலும் நீக்கமற நிறைந்துள்ளன. ஆனால், நாம் எப்போதும் இவற்றுடன் தொடர்புபடுத்திக்கொள்வதில்லை. எனவே தான் மார்ச் 21 இன்றைய நாள், சர்வதேச வன தினமாகக் கொண்டாடப்பட்டு, நம் வாழ்வில் வனங்களின் கொடுக்கும் கொடைகள் என்ன என்பது நினைவுகூறப்படுகிறது.

பருவநிலை மாற்றம், காடுகள் அழிப்பு என இன்றைய காலகட்ட பிரச்னைகளால் இந்த நாளை நாம் புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது. அவற்றின் முக்கியத்துவம் மற்றும் புவியில் வாழ்வை அவை எவ்வாறு சமநிலைப்படுத்த உதவுகின்றன என அனைத்தையும் நாம் அறிவது அவசியம்.

‘காடுகளும் கண்டுபிடிப்புகளும் – சிறப்பான உலகிற்கான புதிய தீர்வுகள்’ என்பது இந்தாண்டு வன தினத்தின் கருப்பொருள். இந்த கருப்பொருள், காடுகள் நம் வாழ்வின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அளிக்கும் முக்கிய பங்கு என்ன என்று உரைக்கிறது. காடுகளை பாதுகாப்பது குறித்த சவால்கள் மற்றும் வனத்தை பாதுகாப்பது மற்றும் நீடித்த பயன்பாடு குறித்து ஊக்குவிப்பதையும் அது முன்னிலைப்படுத்துகிறது.

மேலும் காடுகளும், ஆரோக்கியமும் என்பது இந்த நாளின் மற்றுமொரு கருப்பொருள் ஆகும். நமக்கு சுத்தமான குடிநீர், காற்று மற்றும் உணவு கொடுப்பதில் காடுகளின் பங்கு குறித்தும் அது பேசுகிறது.

இந்நிலையில் தமிழகத்தின் வன நிலைகுறித்து வன ஆராய்ச்சியாளர் மோகன்ராஜ் நம்மிடம் பேசியபோது,

தமிழகத்தின் வனப்பகுதிகளை பாதுகாக்க நாம் இந்த நாளில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த நாளை கொண்டாடும் வேளையில் நாம் மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டு உள்ளோம். எனவே மக்கள் எந்த அரசியல் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதோ, அந்த அரசியல் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.

இந்த நாளில் மட்டுமே வனங்கள் குறித்து நாம் பேசக்கூடாது அனைத்து நாளிலும் அதுகுறித்து பேசவேண்டும். கடந்த 10 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் நாம் காடுகளின் அளவை எவ்வளவு இழந்துள்ளோம் என்பது, நாம் இழந்துள்ள காட்டின் அளவு ஆகும். மாநில அரசு மற்றும் மத்திய அரசு இருவருமே வனங்களை பல்வேறு பணிகளுக்காக காடுகளை அழிக்கின்றனர்.

நாம் 6 சதவீத வனங்களை பாதுகாப்பதில் மட்டும்தான் முக்கியத்துவம் செலுத்துகிறோம். அதாவது பாதுகாக்கப்பட்ட பகுதிகள், வன உயிரியல் பூங்காக்கள் போன்றவற்றை மட்டும்தான் கணக்கில் கொள்கிறோம். எஞ்சிய வனப்பகுதிகளை நாம் கண்டுகொள்வதில்லை.

இவை பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. நாம் நமது வனங்களை தொடர்ந்து இழந்து வருகிறோம். இது உலகளவில் நடந்து வருகிறது. பருவநிலை மாற்றம் இயற்கை பேரிடர்கள், விலங்கியல் நோய்கள் ஆகிய அனைத்துக்கும் வனங்கள் அழிக்கப்படுவது காரணமாகிறது. நாம் பள்ளி, கல்லூரிகளில் கிடைத்த விழிப்புணர்வை பயன்படுத்தி, நாம் வனங்கள் பாதுகாப்பில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்வதில்லை. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வனங்களை பாதுகாப்பது சாத்தியமில்லை.

வனஅழிப்பை நிறுத்த வேண்டும். அப்போதுதான் வனப்பரப்பை அதிகரிக்க முடியும். தமிழ்நாட்டில் 22 சதவீதம் வனப்பரப்பு உள்ளது. மரங்கள் நடுவது வனப்பகுதியில் வராது. ஒவ்வொரு நாடும் 35 சதவீத வனப்பரப்பு வைத்திருக்க வேண்டும். ஆனால் நாம் அதைவிட குறைந்தளவுதான் வைத்துள்ளோம். எஞ்சிய நிலங்கள் வனத்துறை மற்றும் தனியார் வசம் உள்ளது.

இந்த நிலங்களில் நாம் மரங்களை மட்டுமே நட்டு பராமரிக்க முடியும். காடுகளை திரும்பக்கொண்டுவரமுடியாது. வனத்தில் பன்முகத்தன்மை இருக்கும். நாம் வனங்களை வளர்க்க முடியாது. மரங்களை மட்டுமே வளர்க்க முடியும்.

இதிலிருந்து நாம் ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு வனப்பகுதியை இழந்து வருகிறோம். ரயில் பாதை, சுரங்கம் என அனைத்துக்கும் வனங்களை பயன்படுத்துகிறோம். அதை நிறுத்தினால் தான் வனங்கள் காக்கப்படும். அப்போதுதான் நாம் வனங்களை பாதுகாக்கிறோம் என்று கூறமுடியும். இருக்கும் வனப்பரப்பை அழியாமல் காப்பதே தொடக்க பணியாக இருக்கும். ஊடுறுவும் தாவரங்களால் வனபரப்பு கணிசமாக அழிந்து வருகிறது.

Forest Conservation Act போன்ற சட்டங்களும், காடுகளை காப்பதற்கு பதில் காடுகளை பிற பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கும் Clearance சட்டங்களாக இருப்பதே உண்மை.

இயற்கையின் கொடையான காடுகளை,வணிக லாப கண்ணோடத்தில் மட்டுமே பார்க்கும் பார்வை மாறினால் மட்டுமே காடுகளை முறையாக காக்க முடியும். மனிதர்களின்றி காடுகள் இருக்கும். ஆனால் காடுகள்(தாவரங்கள்) இன்றி மனிதர்களால் உயிர்வாழ்வது மிகவும் கடினம். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.