How to be Happy : இன்று உலக மகிழ்ச்சி தினம்! உங்கள் மூளையை மகிழ்ச்சியால் நிரப்புவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  How To Be Happy : இன்று உலக மகிழ்ச்சி தினம்! உங்கள் மூளையை மகிழ்ச்சியால் நிரப்புவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்!

How to be Happy : இன்று உலக மகிழ்ச்சி தினம்! உங்கள் மூளையை மகிழ்ச்சியால் நிரப்புவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்!

Priyadarshini R HT Tamil
Published Mar 20, 2024 01:31 PM IST

How to be Happy : மகிழ்ச்சியாக எப்படி இருப்பது என்று ஆச்சர்யப்படுகிறீர்களா? மகிழ்ச்சியின் நன்மைகளை கட்டாயம் நாம் மறுக்க முடியாது. எனவே உங்கள் மூளையை மகிழ்ச்சியாக வைத்திருப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

How to be Happy : இன்று உலக மகிழ்ச்சி தினம்! உங்கள் மூளையை மகிழ்ச்சியால் நிரப்புவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்!
How to be Happy : இன்று உலக மகிழ்ச்சி தினம்! உங்கள் மூளையை மகிழ்ச்சியால் நிரப்புவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்!

உங்கள் வாழ்வில் உள்ள நல்ல விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். குறைகளையும், குற்றங்களையும் பார்த்துக்கொண்டிருக்காதீர்கள். நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர்கொள்ளுங்கள். இது உங்கள் ஆரோக்கியமானவராகவும், மகிழ்ச்சியானவராகவும் வைத்திருக்கும்.

நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பது உங்கள் உடல் நலனுக்கு எத்தனை நன்மைகளை கொடுக்கிறது பாருங்கள்?

நேர்மறையான மனநிலை நீங்கள் உள்ளார்ந்து பலம்பெற மற்றும் நற்பண்புகளையும் வளர்ப்பதில் கவனம் செலுத்தினால், அதன்மூலம் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் பெறுங்கள். உடற்பயிற்சி, சிரிப்பு, பிணைப்பு, சமூக தொடர்பு, மற்றவர்கள் மீது அன்பு, அக்கறை என்ற நடவடிக்கைகள், உங்கள் மூளையில் எண்டோர்ஃபின்களை சுரக்க வைக்கிறது. இவை உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஹார்மோன்கள். இவை மகிழ்ச்சி ஹார்மோன்கள் என்றும் அழைக்கப்படுகிறது.

உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும் வழிகள்

உங்கள் பலங்களில் கவனம் செலுத்துங்கள்

உங்கள் குணநலன்களை அறிந்துகொண்டு, அதை வளர்க்கவும், பாதுகாக்கவும் நேரத்தை செலவிடுங்கள். குறிப்பாக நீங்கள் கிரியேட்டிவான நபர் என்றால், ஒரு வாரத்தில் கட்டாயம் சில மணி நேரங்கள் அந்த திறனை வளர்த்துக்கொள்ள செலவிடுங்கள். அந்த நேரத்தில் நீங்கள் வரையலாம், வண்ணம் தீட்டலாம், இசை கற்கலாம், சமைக்கலாம் அல்லது ஆர்வத்தை தூண்டக் கூடிய புதிய விஷயங்களைச் செய்யலாம்.

பாராட்டுங்கள்

நன்றி கூறுவது அல்லது மற்றவர்களை பாராட்டுவது, உங்கள் மனதை மகிழ்விக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாகும். தினமும் முயற்சி செய்து, உங்கள் வாழ்வில் கிடைத்த நல்லவற்றுக்கும், நல்ல மனிதர்களுக்கு நன்றி கூறுங்கள். உங்கள் வாழ்வில் உண்மையில் நன்றி கூறவேண்டியவர்களுக்கு, நன்றி உரைத்து அதை அவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். உங்கள் நன்றியை பகிர்ந்துகொள்ளுங்கள்.

உங்கள் சிந்தனைகளை எழுதுங்கள்

உங்களின் உணர்வு அறிவுத்திறனை வளர்ப்பதற்கு இது ஒரு வழி. நீங்கள் உங்கள் வாழ்வில் முழுகவனத்துடனும் இருப்பதற்கு உதவும். எனவே உங்களின் சிந்தனைகள் மற்றும் மன ஓட்டங்கள், எண்ணங்களை எழுதுவது உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செயல்களுள் ஒன்று.

நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்

நேர்மறை மனநிலையை வளர்த்துக்கொள்வதற்கு அதை கற்றுக்கொள்வது மிகவும் அவசியம். எனவே உங்கள் மனம் மனநிறைவுடன் இருப்பதற்கு பயிற்சி கொடுங்கள். அதற்கு அடுத்தவர்களை நன்றாக கவனிக்க வேண்டும். 

நீங்கள் நல்ல கோணத்தை பார்ப்பவராக இருக்க வேண்டும். இதிலிருந்து உங்களுக்கு கிடைக்கும் விழிப்புணர்வை, உங்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். இது உங்கள் வேலைக்கும், உங்கள் வீட்டுக்கும் இடையில் ஒரு இணைப்பை உருவாக்கும்.

அன்பு பழகுங்கள்

நேர்மறையான உளவியல் சிறிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவைக்கும். அது உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுக்கு உங்கள் அன்பின் வெளிப்பாடாக சிலருக்கு பரிசுப்பொருட்கள் வாங்கிக்கொடுப்பது. 

ஒரு நல்ல விஷயத்தில் தன்னார்வலாராக உங்களை ஈடுபடுத்திக்கொள்வது, நன்கொடை வழங்குவது, முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்கு உதவுவது என்று நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் உங்கள் மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதனுடன், உங்களுக்கு நேர்மறை ஆற்றலையும், உங்கள் ஆரோக்கியத்துக்கும் உதவும்.

வாழ்வில் அர்த்தங்களை தேடுங்கள், எனவே அர்த்தம் நிறைந்த அனுபவங்களை தேடிப்பெறுங்கள்

வாழ்வில் எது அர்த்தமுள்ளது? ஏன் அர்த்தமுள்ளமு என்று புரிந்துகொள்ள உதவும். வாழ்க்கையில் நாம் எதை சாதிக்கிறோம் என்பதும் முக்கியம். ஒருவருக்கு தெளிவான இலக்கு என்பதும், எதிர்பார்ப்பு என்ற ஒன்றும் இருந்தால், நீங்கள் மகிழ்ச்சியுடன் வாழ முடியும்.

நேர்மறையான கற்பனைகளில் கவனம் செலுத்துங்கள்

உங்கள் கண்களை மூடி நேர்மறையான அழகான நாளை கற்பனை செய்யுங்கள். நீங்கள் எங்கு இருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அந்த இடத்தை கற்பனை செய்து பாருங்கள். யாருடன் இருக்க வேண்டும். அப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும். அதை செய்வதை கற்பனை செய்து பாருங்கள். இதுபோல் நீங்கள் கற்பனை செய்யும்போது நீங்கள் மகிழ்ச்சியை உங்கள் வாழ்வுக்கு வரவேற்கிறீர்கள். அது உங்களை மேலும் மகிழ்ச்சியாக்கும்.