Vanitha Vijaykumar: உங்க மகன் உங்களுக்காக வருவாரா?.. ரசிகர் கேட்ட கேள்வி.. எமோஷனல் ஆன வனிதா விஜயகுமார்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற வனிதா விஜயகுமார் மீண்டும் மீடியா வெளிச்சத்திற்கு வந்தார். அதனைத்தொடர்ந்து தன்னுடைய மகளான ஜோவிகாவையும் அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற செய்தார்.
பிரபல நடிகரான விஜயகுமாரின் மகள் வனிதா ஜயகுமார். விஜய் நடித்த சந்திரலேகா திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான அவர், தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார். வனிதா விஜயகுமாரை பொறுத்தவரை அவர் நடிகையாக பிரபலமானதை விட, அவருடைய பர்சனல் பிரச்சினைகளின் வழியாகவே பிரபலம் அடைந்ததே அதிகம்.
முதலில் நடிகர் ஆகாஷை திருமணம் செய்த அவர் கருத்துவேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். அதன் பின்னர் தொழிலதிபர் ஆனந்த் ஜெய் ராஜனை திருமணம் செய்து கொண்டார். அந்த மண உறவும் சில ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் பீட்டர் பால் என்பவருடன் உறவில் இருந்த வனிதா அவரையும் திருமணம் செய்து கொண்டு பின்னர் பிரிந்தார்.
இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற வனிதா விஜயகுமார் மீண்டும் மீடியா வெளிச்சத்திற்கு வந்தார். அதனைத்தொடர்ந்து தன்னுடைய மகளான ஜோவிகாவையும் அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற செய்தார். தன்னுடைய மகள் ஜோவிகாவை எப்படியாவது கதாநாயகியாக மாற்றிவிட வேண்டும் என்ற முனைப்போடு போராடிக்கொண்டிருக்கும் வனிதா அண்மையில் இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் உரையாடினார்.
அப்போது அவரிடம் ரசிகர் ஒருவர் உங்களின் மகனான ஸ்ரீஹரியை (ஆகாஷிற்கு பிறந்த மகன்) உங்களுக்கு எவ்ளோ பிடிக்கும். அவர் உங்களுக்காக திரும்ப வருவாரா? என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த வனிதா நீங்கள் யாரவையாது உண்மையாக நேசித்தால், அவர்களை அப்படியே விட்டு விடுங்கள். அது உங்களிடம் மீண்டும் வந்தால் அது உங்களுடையது. இல்லை என்றால் அது உங்களுடையது இல்லை” என்று பதில் அளித்து இருக்கிறார்.
முன்னதாக, பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்து வந்த வனிதா, அதில் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப்பை கடுமையாக விமர்சனம் செய்து பேசி இருந்தார். இதனையடுத்து அவரை மர்மநபர் ஒருவர் தாக்கினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த தாக்குதல் பற்றி பேசிய அவர், “தெலுங்கில் பல்லவி பிரஷாந்த் என்பவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வின்னராக மாறினார். ரன்னராக அமர்தீப் என்பவர் அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் பல்லவி பிரசாத்தின் ரசிகர்கள் அமர்தீப் காரை அடித்து உடைத்தனர்.
அதை நான் பார்த்தேன். ஆனால் இதனை பற்றி பேசிய தமிழ் ரசிகர்கள், நல்ல வேளையாக எங்கள் ஊரில் இந்த மாதிரி எல்லாம் இல்லை என்று கமெண்டுகளை பதிவிட்டனர்.
அங்கு காரை தான் உடைத்தார்கள். இங்கு என்னுடைய முகத்தையே உடைத்து விட்டார்கள். இதை மட்டும் நம்ப மறுக்கிறார்கள்; காரணம் என்னவென்றால், இதை வனிதா சொல்கிறார்.
அவர்களை யாரப்பா அடிப்பார்? அவர் விழுந்திருப்பார் என்று கூறுகிறார்கள். நான் உண்மையிலேயே கீழே விழுந்தால் தலையில் அடிப்பட்டு கட்டு போட்டிருப்பார்கள்.
ஆனால் கண்ணில் இவ்வளவு பெரிய காயம் ஏற்பட்டிருக்காது.கிட்டத்தட்ட நான் தாக்கப்பட்டு ஒரு மாதம் ஆகப்போகிறது. இன்றும் நான் கண்ணாடி போட்டு தான் சுற்றிக் கொண்டிருக்கிறேன். புது வருடத்தில் எல்லாம் சரியாகி விட்டு, நான் பழைய வனிதாவாக மீண்டும் வருவேன்.
என்னை தாக்கியவர்களுக்கு நான் கொடுத்த செருப்படி இந்த ஒரு மாதம் நான் தொடர்ச்சியாக பிக் பாஸ் குறித்து விமர்சனம் செய்தது, வெளியே பயணம் செய்தது உள்ளிட்டவை ஆகும்.
என்னை எதுவும் தடுக்க முடியாது என்று சொல்வதற்காகவே நான் இப்படி செய்கிறேன். நான் எங்கேயும் சோர்ந்து படுக்கவில்லை; படுக்கவும் மாட்டேன். என்னை யாராலும் உடைக்க முடியாது. தெலுங்கில் உள்ளது போலே அதே அளவுக்கான வன்மம் நம் ஊரிலும் இருக்கிறது. இப்போது இருக்கக்கூடிய போட்டியாளர்களுக்கு சோசியல் மீடியாவில் இருந்து கற்பழிப்பு குறித்தான மிரட்டல்கள், கொலை மிரட்டல்கள் உள்ளிட்டவை வந்து கொண்டே இருக்கின்றன” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்