தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பக்கவாதம் யாருக்கெல்லாம் வரும்? தடுக்க என்ன செய்யலாம்?

பக்கவாதம் யாருக்கெல்லாம் வரும்? தடுக்க என்ன செய்யலாம்?

Marimuthu M HT Tamil
Nov 02, 2023 11:00 AM IST

பக்கவாதம் பற்றி அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பக்கவாதம்
பக்கவாதம் (Freepik)

ட்ரெண்டிங் செய்திகள்

பக்கவாதம் யாருக்கெல்லாம் வரும் என்பதுகுறித்து சில காரணிகளை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

  • நீரிழிவு நோயாளிகளுக்கு, அதிக ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு பக்கவாதம் வரும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிகின்றனர்.
  • அதேபோல், புகைப்பழக்கம் கொண்டிருப்பவர்களுக்கும், அமர்ந்த நிலையில் பணிசெய்யும் நபர்களுக்கும் பக்கவாதம் வர வாய்ப்புகள் உள்ளது.
  • மேலும், மதுப்பழக்கம் கொண்டிருப்பவர்களுக்கும் இரவில் வெகுநேரம் முழித்து இருப்பவர்களுக்கும் பக்கவாதம் வரும்.
  •  மன அழுத்தம் இருப்பவர்களுக்கும் பக்கவாதம் வர வாய்ப்பு இருக்கும்.

பக்கவாதத்தைத் தடுக்க என்ன செய்யலாம்:

  •  தினசரி ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்யலாம்.
  • மன அழுத்தம் குறைய யோகா செய்யலாம்.
  • வெகுநேரம் அமர்ந்து பணி செய்பவர்கள், ஒரு மணி நேரத்திற்கு ஒரு 5 நிமிடமாவது எழுந்து நடைப்பயிற்சி செய்யவேண்டும். அவ்வாறு செய்யவில்லையென்றால், உடலில் கொழுப்பு சேரும் ஆபத்துகள் அதிகமுண்டாகும். ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இது பக்கவாதத்திற்கு ஒரு காரணி.
  •  சரிவிகித உணவு, எடுத்துக்கொள்ள வேண்டும்.
  •  தூக்கம் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருவருக்கு 8 மணி நேரம் தூக்கம் பாதிக்கப்பட்டால் பக்கவாதம் வரும் வாய்ப்புகள் அதிகம்.

பக்கவாதத்தின் அறிகுறிகள்: பக்கவாதம் இருப்பவர்களின் முகம், கை ஆகியவற்றில் உணர்வு இல்லாத தன்மை இருத்தல், பேசுவதில் தடுமாற்றம், தலைசுற்றல், நடைப்பயிற்சி பிரச்னை ஆகியவை இருந்தால் பக்கவாதம் வர வாய்ப்பு இருப்பதாக உணர்ந்து உடனடி சிகிச்சை பெறுவது அவசியம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்